உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்; மாநில அரசு நடவடிக்கை

காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்; மாநில அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பைசரன் பள்ளத்தாக்கு பகுதி. இது சுற்றுலா பயணிகளால் விரும்பப்படும் பகுதியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது தான் சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j1ddpxp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அரசு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்திருக்கிறது. இந்த 48 இடங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளன அல்லது பாதிக்கப்படக்கூடியதாக கருதப்படும் பகுதிகளில் அமைந்துள்ளன என்பதால் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்பத்ரி, யூஸ்மார்க், கௌசர்நாக், தௌசிமைதான், அஹர்பால், பங்கஸ், கரிவான் டைவர் சண்டிகம், பங்கஸ் பள்ளத்தாக்கு, ராம்போரா, ராஜ்போரா உள்ளிட்ட 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தற்போது சுற்றுலாவுக்கு அனுமதியுள்ள 39 இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mr Krish Tamilnadu
ஏப் 29, 2025 20:28

அந்த குற்றவாளிகள் பிடிபடும் வரை, தர்மசங்கடம் தான். இந்து ஆண்கள், அந்த கலவர பயத்தை கண்ணீல் தாங்கும் அதீத பாச சொந்தங்கள் என்றே நடத்தி‌ உள்ளனர். காடுகள் வழியே பயணம் எனில், பதுங்கும் இடங்களை ஏற்படுத்தி இருப்பார்கள். இன்னும் எல்லை தாண்ட வில்லை. யாத்திரை கூட அவர்கள் இலக்காக இருக்கலாம். தற்கொலை படையாக தான் இறங்கி இருக்க வேண்டும். 20ம் தேதி திறக்கப்பட்டு, பாதுகாப்பு குறைவு என்பதால் முன்னோட்ட தாக்குதலாக கூட நடத்தி இருக்கலாம். நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிக அவசியம்.


ram
ஏப் 29, 2025 15:46

இதற்குத்தானே ஆசை பட்டார்கள் இந்த இண்டி கூட்டணி ஆட்கள். இந்தியா நன்றாக இருந்தால் பாக்கிஸ்தான் ஆட்களை விட இவர்களுக்குத்தான் ஆகாது.


KRISHNAN R
ஏப் 29, 2025 13:25

கொடுமை தான்... அங்குள்ள மக்களுக்கு வருமானம் இல்ல.


Ramesh Sargam
ஏப் 29, 2025 12:30

மூடுவது சரியல்ல. மூடுவதால் நாம் பயந்துவிட்டோம் என்று அந்த பாக்கிஸ்தான் வளர்ப்பு தீவிரவாதிகள் நினைத்து கும்மாளம் போடுவார்கள். ஆகையால், தகுந்த பாதுகாப்புடன் அவைகள் பொதுமக்களுக்கு திறந்திருக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை