உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லடாக்கில் 4ஜி சேவை; இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்

லடாக்கில் 4ஜி சேவை; இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: லடாக் யூனியன் பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 4ஜி சேவை வழங்கப்படுவது, இந்திய ராணுவத்திற்கு பெரிதும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தத்தின் போது, லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. லடாக்கில் பயங்கரவாதிகளின் செயல்பாட்டை முடக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன், லடாக்கில் உள்ள 20 குக்கிராமங்களில் 4ஜி சேவையை கொண்டு வருவதற்கான உயர்கோபுரங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், 4ஜி சேவை அமலுக்கு வந்துள்ளது. இது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி கூறுகையில், ' மிகவும் உயரமான பகுதியாக இருக்கும் லடாக்கில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தி இருப்பது ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேசிய பாதுகாப்பு மற்றும் இந்த பிராந்திய வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K Raveendiran Nair
நவ 17, 2024 13:41

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் பாராட்டுக்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 06:52

சிறப்பு ......... தேசவிரோதிகள் கதறுகிறார்கள் ....... மத்திய பாஜக வுக்குப் பாராட்டுக்கள் ........


சிவம்
நவ 16, 2024 22:39

சபாஷ். ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் நேரிடையாக காணொளி வழியாக பார்த்து பேச வழி வகுக்கும். வீரர்களின் மனோ பலம் அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சோர்வு நீங்கும். ஆனால் ஒன்று எதிரிகள் நமது சேவையை பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை