உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: ஜோ ரூட் சதத்தால் மீண்டது இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: ஜோ ரூட் சதத்தால் மீண்டது இங்கிலாந்து அணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் முதலில் தடுமாறிய இங்கிலாந்து ஜோ ரூட் சதத்தால் மீண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்து உள்ளது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ராஞ்சியில் இன்று (பிப்.,23) துவங்கியது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஆகாஷ் தீப் அறிமுகமானார்.இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலே, பென் டக்கெட் துவக்கம் தந்தனர். அறிமுக வீரர் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் மிரட்டினார். அவரது பந்தில் பென் டக்கெட் (11), போப் (0), கிராலே (42) வரிசையாக வெளியேறினர். பேர்ஸ்டோவ் (38) அஸ்வின் சுழலிலும், ஸ்டோக்ஸ் (2) ஜடேஜா சுழலிலும் எல்பிடபிள்யூ ஆகினர். அடுத்தடுத்து அந்த அணி வீரர்கள் ஆட்டமிழந்ததால் தடுமாறிய அந்த அணியை ஜோ ரூட் சிறப்பாக விளையாடி மீட்டார். ஜோ ரூட் 106 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ