உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q9hjwy1z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விபத்து நடந்த உடனே உள்ளூர்வாசிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். விபத்து குறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரகாஷியில் உள்ள கங்கானி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். விபத்து குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். நான் தொடர்ந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthik
மே 08, 2025 11:56

சும்மா ..


India our pride
மே 08, 2025 11:52

வடமாநிலங்கள் மற்றும் நேபாள சுற்றுலா தலங்களில் முறையாக பராமரிக்க படாத பழைய ஹெலிகாப்டர்கள் பல உள்ளன. கூடிய மட்டிலும் தமது உயிரை காப்பாற்றி கொள்ள அவற்றில் பயணம் செய்யாமல் இருப்பது உயிருக்கு நல்லது. காலா நிலையும் மிக மோசம். அடிக்கடி மாறும்.


Savitha
மே 08, 2025 11:32

ஹெலிகாப்டர் என்ன பணிக்காக அங்கு பயன்படுத்த படுகிறது? பயணம் செய்தவர்கள் யார்? யாத்ரீகர்கள் பயன்பாட்டுக்கு ஹெலிகாப்டர் அங்கு உள்ளதா?


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 08, 2025 12:09

இதெல்லாம் என்ன கேள்விங்க?


VSMani
மே 08, 2025 11:09

ஹெலிகாப்டரில் பயணம் செய்தது யார் ? என்ன பணிக்காக சென்றார்கள் ?