உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீண்டாமை வழக்கில் 5 பேர் கைது

தீண்டாமை வழக்கில் 5 பேர் கைது

முசாபர்நகர்:தலித் வாலிபரை தாக்கி, ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரைச் சேர்ந்தவர் குல்லு, 19. தலித் இனத்தைச் சேர்ந்த இவர், பதாய் காலா கிராமத்திலிருந்த ஒரு கடைக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த ஆஸாத், அன்கூர், நிதின், தீபக் மற்றும் சவுரவ் ஆகியோர், குல்லுவிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், அவரைத் தாக்கி, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. குல்லு கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை