உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் குழந்தையை சீரழித்த போதை ஆசாமி: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

ம.பி.,யில் குழந்தையை சீரழித்த போதை ஆசாமி: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி, கொடூரமாகவும் தாக்கி உள்ளான். இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.ம.பி., மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஷிவபுரி பகுதியில் 5 வயது குழந்தை கடந்த 23ம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வீட்டின் அருகே, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயதான நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவன் மதுபோதையில் குழந்தையை கடத்தி வந்து, பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்தியதுடன், தலையை பல முறை சுவற்றில் மோதச் செய்துள்ளான். பிறகு கொடூரமாக தாக்கி உள்ளான். அதில், குழந்தையின் தலை மட்டும் அல்லாமல் உடல் மற்றும் பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, குழந்தையின் பிறப்புறுப்பில் மட்டும் டாக்டர்கள் 28 தையல் போட்டு உள்ளனர். குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, குழந்தை பிழைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். பல மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த போதும், குழந்தையின் உடல்நிலை இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனையறிந்த அப்பகுதி வாசிகள் போராட்டத்தில் குதித்தனர். குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பல்லவி
பிப் 28, 2025 17:45

Prayers for the child and her family


Azar Mufeen
பிப் 28, 2025 12:29

இறைவன் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி, எல்லா மத நூல்களிலும் கூப்பிட்ட குரலுக்கு இறைவன் செவிமடுப்பான் என்று புளுகு வேறு, ஏன் அந்த குழந்தை வலியில் அழுகும்போது இறைவன் என்ன செய்துகொண்டிருந்தானாம்


Jayaraman Ramaswamy
பிப் 28, 2025 11:55

மிருகங்களுக்கெல்லாம் கோர்ட் கிடையாது. இந்த மிருகத்தை தாக்கித்தான் கொல்லவேண்டும். சுட்டு கொன்றால் வலி தெரியாது. உள்ளூர் பஞ்சாயத்து கூடி தண்டனை கொடுக்க வேண்டும். கோர்ட்டுக்கு போனால் தப்பி விடும் இந்த மிருகம்


அப்பாஜி
பிப் 28, 2025 07:41

சீக்கிரம் விடுதகை ஆயிடுவாரு ஹை.


Senthoora
பிப் 28, 2025 03:51

ஒரு தையல் மெஷின் அமேசானினில் ஆர்டர் கொடுங்க.


Nandakumar Naidu.
பிப் 28, 2025 02:02

இது போன்ற மிருகங்களை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து அவன் பயப்படும் அளவிற்கு சித்ரவதை செய்து மரண தண்டனை வழங்க வேண்டும்.


மதிவதனன்
பிப் 28, 2025 00:10

ஓசி சோறு போராட்ட சேயா MP செல்வாரா , செருப்பு போடாமல் சவுக்கடி அடிச்சிப்பாரா இல்ல இங்கு புளுகின மாதிரி 3 நாளில் ஷூ போட்டு ஏமாற்றுவார


vijai hindu
பிப் 28, 2025 11:37

மதிவாணன் சம்பந்தமே இல்லாத கருத்து போடாதீங்க


aaruthirumalai
பிப் 27, 2025 23:32

இந்த மாதிரியான செய்தி வேண்டாம் நெஞ்சு பதறுகிறது.


Rangarajan Cv
பிப் 28, 2025 05:49

True. God save the kid. Ruthless animals are living amongst human beings. Not civilised society. Parents take care of your children. Those kids who don’t hv parents, society should come out of selfish attitude


Ganapathy
பிப் 27, 2025 22:51

அம்பேத்கார் வகுத்தசட்டம் இவனை பாதுகாக்கும். கவலை வேண்டாம்.


Ganapathy
பிப் 27, 2025 22:50

ரிலாக்ஸ் மக்களே...இவனுக்குன்னு பல மனித உரிமை இயக்கங்கள் கட்டாயம் வரும். இவன் இன்னும் பலகாலம் ஸிரஞ்ஜீவியாக நமது வரியில் உண்டு உறங்கி அதிகபட்சம் சிறிது நாட்கள் சிறையில் இருப்பான் சிறிது காலத்திற்குபின் இருக்கவே இருக்கு ஜாமீன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை