உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டெய்லி 200 தோப்புக்கரணம்; பள்ளியில் மயங்கிய 50 மாணவிகள்: இது ஆந்திரா ஸ்டைல்!

டெய்லி 200 தோப்புக்கரணம்; பள்ளியில் மயங்கிய 50 மாணவிகள்: இது ஆந்திரா ஸ்டைல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்; ஆந்திராவில் 200 முறை தோப்புக்கரணம் போடுமாறு மாணவிகளை பள்ளி முதல்வர் பாடாய்படுத்த, அவர்களில் 50 பேர் மயங்கி, சரிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தண்டனை

பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது வழக்கம். அவரவர் நோக்கங்களுக்கு ஏற்ப தண்டனைகளின் வடிவம் உருவம் பெறும். இந்நிலையில், ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட நூதன தண்டனை சர்ச்சையாகி இருக்கிறது.

தோப்புக்கரணம்

அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவிகள் ஒழுங்காக படிப்பதில்லை, உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, பள்ளி முதல்வர் மாணவிகளை அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளார். அனைவரையும் 3 நாட்கள் தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதே அது.

மயங்கினர்

தோப்புக்கரணம் போட, போட மாணவிகள் ஒவ்வொருவரின் உடல்நிலையும் மோசம் அடைந்தது. சிலர் கால்கள் வீங்கியபடி கதற அப்போதும் தண்டனையை நிறுத்த முதல்வர் உத்தரவிடவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே மயங்கி, சரிந்து விழுந்திருக்கின்றனர்.

மருத்துவமனை

இதைக்கண்டு அதிர்ந்த மற்ற ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இந்த விவரம் அப்படியே பூதாகரமாக, ரம்பச்சோதவரம் எம்.எல்.ஏ., மிரியாலா ஸ்ரீசிரிஷ்யதேவிக்கு தகவல் பறந்திருக்கிறது.

மனித தன்மையில்லை

இதுகுறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறி உள்ளதாவது; மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மனித தன்மையற்ற செயல். ஒழுங்கீனம் என்பதற்காக இப்படி ஒரு தண்டனை அவசியம் இல்லை. போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

aaruthirumalai
செப் 18, 2024 23:20

முட்டாபய


R S BALA
செப் 18, 2024 18:59

சைக்கோத்தனம் எல்லா இடங்களிலும் துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறது... மயக்கம் வரும் அளவிற்கு தண்டனை அப்படியே உயிர் போனால் இந்த ஆசிரியன் மீட்டுத்தருவானா இந்த வாத்தி அவன் மனைவியிடம் தினம் மண்டியிடுவான் போல அதனை பள்ளியில் பிஞ்சுகளிடம் தண்டனை என்ற பெயரில் தீர்த்துக்கொள்கிறான்...


D.Ambujavalli
செப் 18, 2024 18:30

தொடர்ந்து 40 50 தோப்புக்கரணம் போட நல்ல திடகாத்திரமானவர்களால் கூட இயலாது. இதில் 200, தொடர்ந்து 3 நாள் என்பது கொடுமையான தண்டனைதான் அந்த முதல்வர் பிள்ளையார் முன் 10/ 12 போட்டுக் காட்டட்டும்


duruvasar
செப் 18, 2024 18:01

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை கொச்சை படுத்த காழ்ப்புணர்ச்சி.


duruvasar
செப் 18, 2024 18:01

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை கொச்சை படுத்த காழ்ப்புணர்ச்சியால் வெளியிடபட்ட செய்தி. தமிழ்நாடு ஊடக தர்மத்தை கடைபிடியுங்கள். அதுதான் நல்லது.


என்றும் இந்தியன்
செப் 18, 2024 17:21

200 தோப்புக்கரணம் மிக மிக அதிகம் மூன்று நாளைக்கு. 20-50 மிக அதிகபட்சமாக கொடுத்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மனதும் சமநிலைப்படும்


Bala
செப் 18, 2024 16:17

திராவிடியன்கள் மாதிரி மாடல் - பூனை மேல் மதில்


Jai Sankar Natarajan
செப் 18, 2024 15:27

பள்ளியில் தோப்புக்கரணம் போடுவது ஒன்று தவறு இல்லை அதேசமயத்தில் 200 தோப்புக்கரணம் கொஞ்சம் மோசமான செயல் தான். இப்பொழுது உள்ள மாணவிகள் உடல் அளவிலும் மனதளவிலும் ரொம்பவோ பலவினமாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக மொபைல் போன் அதிகளவில் உபயோகப்படுத்துவதாலும் மற்றும் தூரித உணவு சாப்பிடுவதாலும் 10 தோப்புக்கரணம் போட்டாலும் மயங்கிய விழுவார்கள்.


Anu Sekhar
செப் 18, 2024 19:31

அந்த பிரின்சிப்பாலை முதலில் 50 போட்டு காண்பிக்க சொல்லுங்க.


சமூக நல விரும்பி
செப் 18, 2024 15:12

மாணவர்களை அடிக்க கூடாது என்பது சரி ஆனால் சரியாக படிப்பதில்லை கீழ்படிவதில்லை என்றால் தண்டனை மிகவும் அவசியம். இன்றைய நிலையில் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்காததால் தான் அவர்கள் வழி தவறி செல்கிறார்கள். அந்த காலத்தில் குழந்தைகளை அடித்து வளர்த்த தாள் தான் அவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் 200 தோப்புக்கரணம் என்பது மிகவும் அதிகம்.


S. Gopalakrishnan
செப் 18, 2024 17:49

என் தகப்பனார் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வாத்தியாராக இருந்தார். பெற்றோர் அவரிடம் வந்து, "கண்கள் இரண்டையும் விட்டு விட்டு எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள்" என்று சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனாலும் பெண் குழந்தைகளுக்கு இருநூறு தோப்புக்கரணம் மூன்று நாட்கள் தொடர்ந்து போடச்செய்யும் தண்டனை மிக மிக அதிகம்.


Indian
செப் 18, 2024 14:49

தோப்பு கரணம் நல்ல உடற்பயிற்சி தான் ..


Karthik M
செப் 18, 2024 17:00

போடுபாரும் 200 தோப்புக்கரணம் 50 போடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை