காலை உணவு சாப்பிட்ட 50 மாணவர்கள் அட்மிட்
பீதர்; அரசு உறைவிட பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.பீதர் மாவட்டம், ஹூம்னாபாத்தில் உள்ளது, பசவதீர்த்த குருகுல உறைவிடப் பள்ளி. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக வாந்தி எடுத்தனர்; சிலர் வயிற்று ேபாக்கால் பாதிக்கப்பட்டனர்.அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவர்களை, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதல்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் மீதான உணவை, நேற்று காலை சூடுபடுத்தி, மீண்டும் மாணவர்களுக்கு வழங்கியது தெரியவந்தது.தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவமனைக்கு சென்று மாணவர்களை சந்தித்து, பெற்றோருக்கு ஆறுதல் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.காலை உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள்.