உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட போகும் கமாண்டோ படை வீரர்கள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட போகும் கமாண்டோ படை வீரர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க, சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோ படை வீரர்களை இந்திய ராணுவம் களமிறக்கி உள்ளது.இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டிவிடவும், தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தானில் நன்கு பயிற்சி பெற்ற 55 பயங்கரவாதிகள் அம்மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களை வேட்டையாடுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் 500 பேரை இந்திய ராணுவம் களமிறக்கி உள்ளது.காஷ்மீரில், உளவுத்துறையும் தனது கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளதுடன், பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை ஒழிக்கவும் பணியாற்றி வருகிறது.பாகிஸ்தானின் மறைமுக போருக்கு பதிலடி கொடுப்பதற்காக 4 ஆயிரம் வீரர்களை காஷ்மீருக்கு ராணுவம் கொண்டு வந்துள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களுடன் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒழிக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ravi Kulasekaran
ஜூலை 26, 2024 14:36

பிச்சைக்கார நாடு பாகிஸ்தான் தீவிரவாதிகளை வைத்து உலகின் மிக பெரிய தீவிரவாதிகளை கொண்ட நாட்டை உலக நாங புறக்கணிக்க வேண்டும் நிதியுதவி ஏற்றுமதி இறக்குமதி உணவு தண்ணீர் எரிவாயு பெட்ரோலிய பொருட்கள் அனைத்துக்கும் தடைவிதிக்க வேண்டும்


subramanian
ஜூலை 20, 2024 23:25

தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரானது அதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜெய் ஹிந்த்


சிந்தனை
ஜூலை 20, 2024 21:20

ஜய் ஜவான்... ஜய் பாரதி...


Rpalnivelu
ஜூலை 20, 2024 19:54

திருட்டு த்ரவிஷன் நாட்டுக்கும் அனுப்புங்க


Lion Drsekar
ஜூலை 20, 2024 17:16

வேட்டை ஆடி ?? பாவம் அவர்கள் நிலை . உள்ளூரில் இருக்கும் காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்தாலே போதும் . எந்த சமூக அவலங்களும் ஏற்படாது . இங்குதான் எல்லா நிலைகளிலும் எல்லார் கைகள், , காதுகள் கால்கள் , வாய்கள் பயன்படுத்த முடியாத நிலை . இரவோடு இரவாக ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு இனத்தவர்களை அடியோடு அடித்து துரத்தி இருக்கிறார்கள் இதுவரை யாருமே , வாயே திறக்கவிலையே . இயற்க்கை ஒன்றுதான் இனி விடிவு கொடுக்கவேண்டும் . வந்தே மாதரம்


Kundalakesi
ஜூலை 20, 2024 16:38

வேட்டை ஆடியில் நல்லது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி