உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு 58% ஆதரவு: வெளியானது சர்வே

பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு 58% ஆதரவு: வெளியானது சர்வே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பீஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அப்போது, வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்கள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 65 லட்சம் பேர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந் நிலையில், இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை 58 சதவீதம் பேர் ஆதரித்துள்ள விவரம் தெரிய வந்திருக்கிறது.நாடு முழுவதும் மக்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது? தேர்தல் நடத்தப்பட்டால் எந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதை மையமாக வைத்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் சர்வே ஒன்றை நடத்தி உள்ளது. அதன் முடிவுகளையும் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகிறது.பீஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றியும் இந்த சர்வேயில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்களில் 58 சதவீதம் பேர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, இதன் மூலம் குடிமக்களின் வாக்காளர் உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். 17 சதவீதம் பேர் அரசியல் கட்சிகளுக்கு உதவுவதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்றும், 12 சதவீதம் பேர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் பதில் அளித்துள்ளனர். ஒட்டு மொத்த சர்வே மூலமாக மெஜாரிட்டியான வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியே என்று தங்கள் ஆதரவை வழங்கி இருக்கின்றனர். இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனத்தின் சர்வே ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடத்தப்பட்டது. பீஹாரில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளில் மொத்தமாக 54,788 தனிநபர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதனுடன், சி வோட்டர் நிறுவனத்தின் கைவசம் உள்ள வழக்கமான தரவுகள் அடிப்படையில் 1,52,038 பேரின் நேர்காணல்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஒட்டு மொத்தமாக, 2,06,826 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. முன்னதாக, தவறுகளை சரிசெய்தல், வாக்காளர்கள் இடம்பெயர்வு மற்றும் மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப வாக்காளர்கள் பதிவுகளை புதுப்பித்தல் ஆகியவையே பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் நோக்கம் என்று தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தி இருந்தது. அதை ஒட்டியே சர்வே முடிவுகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ManiMurugan Murugan
ஆக 31, 2025 00:13

ManiMurugan Murugan அருமை தமிழ் நாட்டிலும் நடத்தப்பட வேண்டும்


Abdul Rahim
ஆக 30, 2025 13:29

என்னதான் முட்டு குடுத்து தேர்தல் கமிஷனின் அநியாயத்தை பாஜக வும் அதன் ஆதரவு ஏடுகளும் நியாயப்படுத்தினாலும் ஒட்டு திருட்டு பாவம் உங்க யாரையும் சும்மா விடாது எத்தனை நாளைக்கு இந்த முட்டு முறியாமல் தாங்கும் னு பார்க்கலாம் காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு நாள் உங்க பிராடுகள் அவைக்கு வந்தே தீரும்.


Mettai* Tamil
ஆக 30, 2025 13:47

அதே காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு நாள் உங்க பிராடுகள் அவைக்கு வந்தே தீரும். கள்ள குடியேறிகளுக்கு ஆதரவா கொடுக்கும் முட்டு ,எத்தனை நாளைக்கு முறியாமல் தாங்கும் னு பார்க்கலாம்...


Sangi Mangi
ஆக 30, 2025 12:50

அதுக்கு வெகுஜனம் நாம என்ன பண்ண முடியும்?


Abdul Rahim
ஆக 30, 2025 14:07

நீங்க பண்ணின பிராடுக்கு முட்டு குடுகுறியா


Mettai* Tamil
ஆக 30, 2025 14:51

நீங்க கள்ள குடியேரிகளுக்கு ஆதரவா பண்ணின பிராடுக்கு முட்டு குடுகுறியா....


Tamilan
ஆக 30, 2025 12:35

பாஜ கார்போரேட்டுகளின் B டீம் நடத்திய கருது கணிப்பு


V Venkatachalam
ஆக 30, 2025 11:27

தேர்தல் ஆணையம் இந்த வேலையை சிறப்பாக செய்திருப்பதாக தான் எனண முடிகிறது. இ சி ஐ போர்ட்டலில் இதை பிரதானமாக பார்க்க முடிகிறது . எஸ் ஐ ஆர் என்று தனித்தளமே டிஸ்ப்ளேயில் வருகிறது. என்ன சந்தேகம் என்றாலும் தெளிவு படுத்தி கொள்ளலாம். இ சி ஐக்கு பாராட்டுகள். ப.கு. யூ டியுப் ல் இந்த செய்தியை படிக்க கூடாது. அவனுங்க பச்சை பொய்யை சிவப்பு பெயிண்ட் அடிச்சு காண்பிப்பானுங்க.


Abdul Rahim
ஆக 30, 2025 14:09

நீங்க அடிச்ச பிராடு வெளுக்கும் நாளும் வரும் .....


Mettai* Tamil
ஆக 30, 2025 14:52

நீங்க அடிச்ச பிராடு வெளுத்தே விட்டதையா ...


Mettai* Tamil
ஆக 30, 2025 09:27

வெற்றி பெற்றால், நல்ல தேர்தல் வெற்றி பெறாவிட்டால், ஓட்டு திருட்டு....


தியாகு
ஆக 30, 2025 09:21

இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவிய மூர்க்க கும்பல்களின் வாக்காளர் பட்டியலை நீக்கினால் பாஜக 450 இடங்களை அசால்ட்டாக அள்ளும்.


Abdul Rahim
ஆக 30, 2025 14:08

இந்த நாற பொழப்புக்கு


Mettai* Tamil
ஆக 30, 2025 14:55

இந்த நாற பொழப்புக்கு, சட்ட விரோதமா ஊடுருவாம சொந்த நாட்லயே இருக்கலாமே ...


vadivelu
ஆக 30, 2025 08:11

29 % மக்கள் வாக்குகள் நிச்சயம் எதிர் கட்சிகளுக்குத்தான். இது பெரும்பாலும் இஸ்லாமியர்களும், கட்சிக்காரர்களுமாகத்தான் இருக்கும்.


VENKATASUBRAMANIAN
ஆக 30, 2025 08:10

இன்டி கூட்டணி பல்ப் வாங்கி உள்ளது. இதுவே இந்த அவர்களுக்கு எதிர்மறையாக போகிறது.


சமீபத்திய செய்தி