வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சும்மானாச்சிக்கும் எதையாவது கெளப்பாதீங்க ஓய்..
மேலும் செய்திகள்
ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
27-May-2025
புதுடில்லி: நாடு முழுதும் கொரோனாவுக்கு , 6,133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். ஆசிய நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் கடந்த மாத துவக்கத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, நம் நாட்டிலும் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதிகபட்சம்
மஹாராஷ்டிரா, கேரளா, தமிழகம், கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 8:00 மணி வரையிலான நிலவரப்படி, நாடு முழுதும் 6,133 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 378 பேருக்கு தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில், 144 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. குஜராத்தில் 105 பேரும், மேற்கு வங்கத்தில் 71 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். கேரளாவில் மூன்று பேர், கர்நாடகாவில் இருவர், தமிழகத்தில் ஒருவர் என ஆறு பேர் கொரோனாவால் நேற்று முன்தினம் பலியாகினர். நீரிழிவு நோய்
இவர்கள் ஆறு பேருக்கும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற இணை நோய்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், நாடு முழுதும் 754 பேர் குணமடைந்து உள்ளனர். நடப்பாண்டில், இதுவரை 65 பேர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் குறித்து, 'இன்சாகாக்' எனப்படும், இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனாவின் புதிய வகையான எக்ஸ்.எப்.ஜி., திரிபு, நம் நாட்டில் 163 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 89 பேருக்கு எக்ஸ்.எப்.ஜி., பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 16, கேரளாவில் 15, குஜராத்தில் 11, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஆறு பேருக்கு புதிய ரக வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 159 பேருக்கும், ஏப்ரலில் இருவருக்கும், இந்த புதிய வகை வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வடஅமெரிக்க நாடான கனடாவில் முதலில் தோன்றிய இந்த எக்ஸ்.எப்.ஜி., அடுத்தடுத்து உலக நாடுகளில் பரவி வருகிறது.
சும்மானாச்சிக்கும் எதையாவது கெளப்பாதீங்க ஓய்..
27-May-2025