உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60,000 வாக்காளர்கள் மாயம்! டில்லி தேர்தல் களத்தில் பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு

60,000 வாக்காளர்கள் மாயம்! டில்லி தேர்தல் களத்தில் பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; புதுடில்லியில் 60,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. பிரமுகர் பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டி உள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுடில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்.8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஆம் ஆத்மி, காங்., பா.ஜ., ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன. இந் நிலையில், புதுடில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும், மாஜி எம்.பி.யுமான பர்வேஷ் வர்மா கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது; கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் புதுடில்லியில் 60,000 வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி உள்ளன. புதிய பட்டியலில் 20,000 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். டில்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். யமுனை நதி அசுத்தம் அடைய அவரே காரணம். மக்களுக்கு அவர் என்ன நல்லது செய்து விட்டார் என்று இப்போதாவது கூற வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் யமுனையை சுத்தப்படுத்துவோம். தலைநகர் டில்லியில் மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்கவில்லை. மாதம்தோறும் மின்கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது. 8000 பஸ்கள் இருந்த நிலையில் தற்போது 2,500 பஸ்கள் மட்டுமே உள்ளன. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 15,000 பஸ்களை இயக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.V. Iyer
ஜன 11, 2025 04:44

மத்தியில் இருப்பது இவர்கள்தானே? இவர்கள்தானே நடவடிக்கை எடுக்கவேண்டும்?


Priyan Vadanad
ஜன 10, 2025 20:42

இதிலென்ன பகீர்????? மஹாராஷ்டிராவில் யாருக்கும் தெரியாமல் சேர்த்துக் கொண்ட மாதிரி இம்முறையும் சேர்த்து ஜெயித்துவிடலாமே


J.Isaac
ஜன 10, 2025 19:54

இரண்டு நாட்களுக்கு முன் கெஜ்ரிவால் இதை தான் சொன்னார்.


sampath, k
ஜன 10, 2025 16:43

It is total responsibility of election commission. They should give undertaking that even a single person is not omitted to cost his duties by voting


Nandakumar Naidu.
ஜன 10, 2025 15:26

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? வாக்காளர் பட்டியலை சரி செய்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை