உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாத் பூஜைக்கு 640 சிறப்பு ரயில்கள்

சாத் பூஜைக்கு 640 சிறப்பு ரயில்கள்

புதுடில்லி:சாத் பூஜைக்குச் செல்லும் பயணியரை கருத்தில் கொண்டு 640 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கை:சாத் பூஜைக்காக செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 640 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை சமஸ்திபூர், டானாபூர் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.இதன்படி, இன்று 164 சிறப்பு ரயில்களும், நாளை 160 சிறப்பு ரயில்களும், நாளை மறுநாள் 161 சிறப்பு ரயில்களும், 11ம் தேதிக்கு 155 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.கடந்த 4ம் தேதி ஒரே நாளில் அன்று, இந்திய ரயில்களில் 120.72 லட்சம் பயணியர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 19.43 லட்சம் முன்பதிவு செய்தவர்கள், 101.29 லட்சம் புறநகர் அல்லாத பயணியரும் அடங்குவர்.அதே நாளில் புறநகர் ரயில்களில் 180 லட்சம் பயணியர் பயணம் செய்தனர். இது ஒரு நாளில் அதிகபட்சம். கடந்த நான்கு நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 175 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 36 நாட்களில் 4,521 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது.அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான இரண்டு மாதங்களில் மொத்தம் 7,724 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 73 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை