உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் கடைசி கட்ட தேர்தல் 67 சதவீத ஓட்டுகள் பதிவு

பீஹாரில் கடைசி கட்ட தேர்தல் 67 சதவீத ஓட்டுகள் பதிவு

பாட்னா: பீஹாரில், 122 தொகுதிகளில் நேற்று நடந்த இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலில், 67.14 சதவீத ஓட்டுகள் பதிவாகின. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. கடந்த, 6ல், 121 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட தேர்தலில், 65 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், மீதமுள்ள, 122 தொகுதிகளில், நேற்று இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை, 6:00 மணி வரை நடந்தது. ஒருசில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடியும் நேரத்துக்கு முன்னரே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்றதால், 6:00 மணியை தாண்டியும் ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை, 5:00 மணி நிலவரப்படி, 122 தொகுதிகளில், 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக, கிஷன்கஞ்ச் தொகுதியில் 76.26; குறைந்தபட்சமாக, நவாடா தொகுதியில், 57 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில், கடைசியாக, 1998ல், 64.6 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், அதை முறியடிக்கும் வகையில், 67 சதவீத ஓட்டுகள் தற்போது பதிவாகி உள்ளன. இரு கட்டங்களின் சராசரி ஓட்டுப்பதிவு, 65 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 2020 சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்தமாக, 57 சதவீத ஓட்டுகளே பதிவாகின. இரு கட்டங்களில் பதிவான ஓட்டுகள், நாளை மறுதினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கருத்து கணிப்புகள் பா.ஜ.,வுக்கு சாதகம் ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கணிப்புகள், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என, தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டே நாள் தான்; மக்களின் தீர்ப்பு தெரிந்து விடும். மொத்த தொகுதிகள் 243 பெரும்பான்மைக்கு தேவை 122 -- நிறுவனம் தே.ஜ., கூட்டணி 'மஹாகட்பந்தன்' கூட்டணி ஜன் சுராஜ் மற்றவை நியூஸ்18 140-150 85-95 0-5 5-10 மேட்ரிஜ் 147 - 167 70 - 90 0-2 2-8 பீபுள் பல்ஸ் 133-159 75-101 0-5 2-8 பீபுள் இன்சைட் 133-148 87-102 0-2 3-6 ஜே.வி.சி., 135-150 88-103 0-1 3-6 டெய்னிக் பாஸ்கர் 145-160 73-91 0-0 5-10 சாணக்யா ஸ்டிராடஜி 130-138 100-108 0-0 3-5 பி-மார்க் 142-162 80-98 1-4 0-3


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mario
நவ 12, 2025 08:18

பீஹாரில் கடைசி கட்ட தேர்தல் 67 சதவீத கள்ள ஓட்டுகள் பதிவு


Ramesh Sargam
நவ 12, 2025 08:14

இப்பொழுதும் இந்திய மக்கள் திருந்தவில்லை. ஒரு தேர்தலில் குறைந்தபட்சம் 80 சதவிகித ஓட்டுகள் பதிவாகவேண்டும். அதற்கு குறைவான பதிவு என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. இந்திய மக்கள் திருந்தவேண்டும். தங்களின் வாக்கு போடும் உரிமையை முற்றிலும் உபயோகப்படுத்தவேண்டும். வாக்களிக்க சோம்பேறித்தனம் படும் மக்கள், அரசை குறைகூற லாயக்கற்றவர்கள். அவர்கள் அரசிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கக்கூடாது.


duruvasar
நவ 12, 2025 07:53

பிஹாரில் எந்த கட்சியும் பணம் பட்டுவாடா செய்ததாக யார் மீதும் எவரும் குற்றசாட்டை வைத்ததாக செய்திகள் வரவில்லை. இதிலிருந்தே தமிழகம் மிகவும் முன்னேறிய மாநிலம் என்பது அவர்களுக்கு புரிந்திருக்கும் .


ஆரூர் ரங்
நவ 12, 2025 07:32

இவ்வளவு அமைதியான தேர்தல் அங்கு நடந்த வரலாறேயில்லை. லாலு காங்கிரசு காட்டாட்சி ஒழிந்தால் வந்த நன்மை. முதிர்ந்த நிதீஷ் பிஜெபி யிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்.


M S RAGHUNATHAN
நவ 12, 2025 07:08

Congratulations to EC for conducting incidents free polls in the history of Bihar.


Narayanan Muthu
நவ 12, 2025 07:31

This credit should go to Bihar voters.


Sekhar
நவ 12, 2025 07:06

இனிமே தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்ஐஆர் இல்லாமல் இருக்கும் தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும், இதை எல்லா தேர்தலுக்கும் முன்பு கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்....இதை பார்லிமென்டில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை