உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறுதி களத்தில் 699 வேட்பாளர்கள்

இறுதி களத்தில் 699 வேட்பாளர்கள்

டில்லி சட்டசபைக்கு வரும் பிப்., 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அவற்றில் ரிசர்வ் தொகுதிகள் 12. மொத்த வாக்காளர்கள் 1.55 கோடி பேர்.கடந்த 10ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கியது. 17ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 981 வேட்பாளர்கள் 1,522 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.நேற்று முன்தினம் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள். அன்று இரவு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. களத்தில் 699 வேட்பாளர்கள் உள்ளனர். முந்தைய சட்டசபைத் தேர்தலில் 672 பேர் போட்டியிட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடில்லி தொகுதியில் மிக அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஏற்கனவே பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மா, காங்கிரஸின் சந்தீப் தீட்சித் ஆகியோரை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் அதிகபட்ச வேட்பாளர்களும் கெஜ்ரிவாலுக்கு சவாலாக உருவெடுத்துள்ளனர்.சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சிக்கு இரண்டு இடங்களை விட்டுச்செல்கிறது.பகுஜன் சமாஜ் கட்சி (BSP) 69 தொகுதிகளில் வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை