உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 இன்ஜின்கள், 354 பெட்டிகள்: இந்தியாவின் நீண்ட சரக்கு ரயிலை இயக்கி ரயில்வே சாதனை

7 இன்ஜின்கள், 354 பெட்டிகள்: இந்தியாவின் நீண்ட சரக்கு ரயிலை இயக்கி ரயில்வே சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டிலேயே மிக நீளமான சரக்கு ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலானது 354 பெட்டிகள், 7 இன்ஜின்கள் கொண்டுள்ள இதற்கு ' ருத்ராஸ்டிரா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. இந்த ரயிலை உ.பி.,யின் கன்ஜ்க்வாஜா முதல் ஜார்க்கண்டின் தான்பாத் வரையில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அப்போது 200 கிலோ மீட்டர் தூரம் ரயில் பயணித்தது. இந்த வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 'எக்ஸ்' சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.https://x.com/AshwiniVaishnaw/status/1953758166287876307 நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் இந்திய ரயில்வேத்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், உயர்த்துவதிலும் 'ருத்ராஸ்திரா' வின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு ரயில்வே வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: புதிய சாதனை. 354 பெட்டிகள் கொண்ட 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சரக்கு ரயிலை கன்ஜ்க்வாஜா முதல் கர்வாகா வரையில் இயக்கி கிழக்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது. 200 கிலோ மீட்டர் தூரம் ரயில் பயணித்தது. இந்த சரக்கு ரயிலை இயக்க 7 இன்ஜீன்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SANKAR
ஆக 09, 2025 02:01

I want 14 engine 708 box 9 km goods train!!!!


vns
ஆக 08, 2025 23:48

முன்னேறாமல் இருக்க தமிழகத்தில் அறிவுரைகள் தருபவர்கள் மிகவும் அதிகம். சரக்கு ரயில்கள் மிகவும் நீளமாக இருப்பது நல்லதுதான். வளர்ந்த நாடுகள் இப்படிதான் சரக்குகளை உள்நாட்டில் அனுப்புகின்றன.


Natarajan Ramanathan
ஆக 08, 2025 20:52

இது தேவை இல்லாத சாதனை.இதையே ஏழு ரயில்களாக பிரித்து இயக்குவது தான் நல்லது.ஏதாவது சிறு விபத்து என்றால்கூட மொத்தமாக அந்த பகுதி ரயில் இயக்கமே ஸ்தம்பித்து விடும்.


Arya Prasad
ஆக 08, 2025 21:09

உண்மை 200கி மீ செல்ல எவ்வளவு நேரம் ஆனது என கூறவில்லை


Ganapathy
ஆக 08, 2025 21:27

மொதல்ல ஏழு ரயில்களை இயக்க ஆகும் செலவை யோசித்தீரா?


SANKAR
ஆக 09, 2025 02:02

possibly 200 hours !!!


சமீபத்திய செய்தி