வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கதி சக்தி இன் ஃபுல் ஸ்விங். இப்பிடி ஆளுங்க போய்ச் சேர்ந்தால் ரோடுகளில் போகறதுக்கு ஆளுங்களும், வாகனங்களும் குறைஞ்சு நிலைமை சீரடைஞ்சு வல்லரசாயிடுவோம். 2047 க்குள்ளாற நடந்து முடிஞ்சிடும்.
பாட்னா: பீஹார் மாநிலம் பாட்னாவில் லாரியும், வேனும் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். அதேபோல், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பஸ் மீது ஜீப் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த ஜீப் பஸ் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள நூரா பாலத்தில் நேற்றிரவு லாரியும், வேனும் மோதி விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கதி சக்தி இன் ஃபுல் ஸ்விங். இப்பிடி ஆளுங்க போய்ச் சேர்ந்தால் ரோடுகளில் போகறதுக்கு ஆளுங்களும், வாகனங்களும் குறைஞ்சு நிலைமை சீரடைஞ்சு வல்லரசாயிடுவோம். 2047 க்குள்ளாற நடந்து முடிஞ்சிடும்.