உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் அதிவேகமாக கார் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், சாப்ரா பகுதியில் சிலர் கடைக்கு சென்று விட்டு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, ரிக்ஷா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெண்கள் 3 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

अप्पावी
மார் 14, 2025 21:48

கதிசக்தி போடு போடுன்னு போடுது. மெடல் குத்தி விடுங்க.


N Sasikumar Yadhav
மார் 15, 2025 00:16

உனக்கு தெரிந்தது கதி சக்தி இல்லையெனாறால் பாஞ்சி லட்சம் . இந்த கோபாலபுர சாராய ஊழல் இதெல்லாம் உங்க மானங்கெட்ட ஞானகண்ணுக்கு தெரியாது


முக்கிய வீடியோ