உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி; தெலங்கானாவில் சோகம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி; தெலங்கானாவில் சோகம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பீம்லா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் , தூப்ரனில் இருந்து சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேடக் மாவட்டத்தை நெருங்கிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரில் சென்ற குழந்தைகள், பெண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையறிந்த போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிவம்பேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை