மேலும் செய்திகள்
பாகிஸ்தான் சிறைகளில் 257 இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்
1 hour(s) ago
மும்பையில் ரூ.3.89 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
5 hour(s) ago | 1
ஜெயலலிதாவுக்கு ஜாமின்; பணம் கை மாறியதா?
10 hour(s) ago | 11
உத்தரகன்னடா: ஷிவமொகா மாவட்டத்தில் தென்பட்ட குரங்கு காய்ச்சல், தற்போது உத்தரகன்னடாவில் பரவுகிறது. ஒரே கிராமத்தின் ஏழு பேர் பாதிப்படைந்துள்ளனர்.இதற்கு முன், மலைப்பகுதி மாவட்டமான ஷிவமொகாவின், பல்வேறு பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக, உத்தரகன்னடா மாவட்டத்திலும் பரவுகிறது. ஐந்து ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.சுகாதாரத் துறையின் நடவடிக்கையால், பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் இப்போது மீண்டும் நோய் பரவுகிறது. வெறும் பத்து நாட்களில், 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உத்தரகன்னடா, சித்தாபுராவின், கொர்லகைதா கிராமத்தில், ஏழு பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 hour(s) ago
5 hour(s) ago | 1
10 hour(s) ago | 11