உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜப்பான் உதவியுடன் 7,000 கி.மீ., நீளத்திற்கு அதிவேக ரயில் திட்டம்

ஜப்பான் உதவியுடன் 7,000 கி.மீ., நீளத்திற்கு அதிவேக ரயில் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ஜப்பான் உதவியுடன் அதிவேக ரயில் திட்டங்கள் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் ரயில்வே துறை வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தந்த முக்கியத்துவத்தால், 'வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத்' போன்ற புதிய விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிய நாடான ஜப்பான் நிதி உதவியுடன் மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை, 509 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படுகிறது. இது, இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயில் பாதை. இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை 'ஷின்கன்சென் இ10' வகை புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லும். இது, 2027ல் தயாராகி விடும். இந்த நவீன புல்லட் ரயில் ஜப்பான், இந்தியாவில் 2030ல் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 'ஷின்கன்சென்' ரயில் இயக்கம் பற்றி இந்திய டிரைவர்களுக்கு ஜப்பான் பயிற்சி அளிக்க உள்ளது. பிரதமர் மோடி ஆக., 29ல் ஜப்பான் செல்கிறார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடன் ரயில்வே திட்டங்கள் பற்றி பேச உள்ளார். 2047ல் சுதந்திர தின நுாற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முன், 7,000 கி.மீ., நீளத்திற்கு அதிவேக ரயில் பாதையை அமைக்க இந்தியா திட்டமிடுகிறது. இது, ஜப்பானின் ஷின்கன்சென் ரயில் 'நெட்வொர்க்'கின் மொத்த நீளத்தை விட இரு மடங்கு அதிகம். முதல் கட்டமாக டில்லி - வாரணாசி இடையே அதிவேக ரயில் பாதையை அமைக்க ஆய்வுகள் நடக்கின்றன. புதிதாக அதிவேக ரயில் பாதை அமைக்க, ஜப்பான் தரப்பில் ஏல விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இந்தியா எதிர்பார்க்கிறது. மோடி - இஷிபா பேச்சின் போது ரயில்வே கட்டமைப்பு தவிர, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது, 'செமி கண்டக்டர்' உற்பத்தியை அதிகரிப்பது, பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ராம்கி
ஆக 18, 2025 06:55

நீங்கள் அதிபுத்திசாலி. பத்தாண்டுகளுக்கு முன் ஏழைகள் எல்லாம் நடுத்தர மக்களாக இருந்தார்களா? இங்கே அரசியல் தலைவர்கள் 50 ஆண்டுகளாக ஊழல் செய்து சொத்து சேர்த்து வருகிறார்கள். எதற்கும் கண் மருத்துவரை பார்த்து...


SATHESHKUMAR RUDHRAMURTHY
ஆக 17, 2025 20:19

யானையை கட்டி தீனி போடும் கதை தான் இந்த ரயில் நம் பொருளாதாரத்திற்கு


Mahendran Puru
ஆக 17, 2025 14:39

ஏழை மேலும் ஏழையாகிறான். பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். இது போன்ற சமாச்சாரங்களை நுகர நடித்தர வர்க்கம் கடன் வங்கி அனுபவித்து மேலும் கடனாளி ஆகிறான். இதுவே கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நாம் காண்பது.


Gokul Krishnan
ஆக 18, 2025 08:34

நீங்க சொல்வது உண்மை ஆனால் இதை கூறுவதால் சங்கி என்ற பெயர்தான் கிடைக்கும் சில தினங்கள் முன் பீகாரில் இருந்து கிளம்பிய ஒரு ரெயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் மிக அதிகமான கூட்டத்தால் ஒரு இளம் பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது ஆனால் இந்த அரசோ வந்தே பாரத் பச்சை கொடி காட்டுவதை மட்டும் வேலையாக கொண்டு உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை