71 வெளிநாட்டினர் நாடு கடத்தல்
புதுடில்லி:துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர், 71 பேர் நாடு கடத்தப்பட்டனர்.இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனிப்படை போலீசார் துவாரகாவில் நடத்திய சோதனையில், மே மாதத்தில் மட்டும் வங்கதேசத்தைச் சேர்ந்த 47 பேர், மியான்மரைச் சேர்ந்த 17 பேர், மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ஏழு பேர் என 71 பேர் கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்குப் பின், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில், 71 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சட்ட நடைமுறைகளுக்குப் பின், 71 பேரும் நாடு கடத்தப்பட்டனர். விசா இல்லாமல் தங்கியிருப்போர் மற்றும் சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்தவர்கள் குறித்து ரகசிய தகவல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனிப்ப்டை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.