உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடான் திட்டத்தின் கீழ் மேலும் 71 விமான நிலையங்கள்; மத்திய அரசு தகவல்

உடான் திட்டத்தின் கீழ் மேலும் 71 விமான நிலையங்கள்; மத்திய அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உடான் திட்டத்தின் கீழ் மேலும் 71 விமான நிலையங்கள் மற்றும் 601 வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வான்வழி போக்குவரத்தை விரிவபடுத்தவும், பொதுமக்களின் பயணத்தை எளிமையாக்குவதற்காக மத்திய அரசு, உடான் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.விமான போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில் விமானங்கள் இயக்குவது இத்திட்டத்தின் நோக்கம். இதில் விமானம் இயக்க முன் வரும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகளை வழங்கும். இத்திட்டத்தில் 601 விமான வழித்தடங்கள் மற்றும் 71 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.இது தொடர்பாக, நேற்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஹெலிகாப்டர் வழித்தடம் உள்பட 601 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், 71 விமானங்கள், 13 ஹெலிகாப்டர் தளங்கள் உள்பட மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம், ஆண்டுக்கு 2.8 லட்சம் விமானங்கள் மூலம் 1.44 கோடி பயணியர்கள் பயனடைய முடியும்.கடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது இரட்டிப்பாகி, 157 ஆக உயர்ந்துள்ளது. 2047ம் ஆண்டுக்குள் 350 முதல் 400 விமான நிலையங்களை உருவாக்குதே மத்திய அரசின் இலக்காக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SIVA
அக் 21, 2024 07:38

இவனுகளை இந்தியாவை விட்டு பாக்கிஸ்தானுக்கு நாடு கடந்தவேண்டியதுதான் உடனே செய்ய வேண்டும். பரத் மாதக்கே ஜெய்.


சமீபத்திய செய்தி