உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலங்களுக்கு ரூ.1.78 லட்சம் கோடி; தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி; நிதி விடுவித்தது மத்திய அரசு!

மாநிலங்களுக்கு ரூ.1.78 லட்சம் கோடி; தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி; நிதி விடுவித்தது மத்திய அரசு!

புதுடில்லி: வரி வருவாயில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி வழங்கப்பட்டுள்ளது.வரி வருவாயில் கிடைக்கும் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து வழங்குகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ.1.78 லட்சம் கோடியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில வாரியாக நிதி விடுவிக்கப்பட்ட விபரம் பின்வருமாறு: * ஆந்திராவுக்கு ரூ.7,211 கோடியும், அருணாச்சல பிரதேசதிற்கு ரூ.3,131 கோடியும், அசாமிற்கு ரூ.5,573 கோடியும், பீஹாருக்கு ரூ.17,921 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ.6,070 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.* கோவாவிற்கு ரூ.688 கோடியும், குஜராத்திற்கு ரூ.6,197 கோடியும், ஹரியானாவிற்கு ரூ.1,947 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,479 கோடியும், ஜார்க்கண்ட்டிற்கு ரூ.5,892 கோடியும், விடுவிக்கப்பட்டுள்ளன.* கேரளாவிற்கு ரூ.3,430 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.6,498 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.13,987 கோடியும், மஹாராஷ்டிராவிற்கு ரூ.11,255 கோடியும், மணிப்பூருக்கு ரூ.1,276 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.* மேகாலயாவிற்கு ரூ.1,367 கோடியும், மிசோரத்திற்கு ரூ.891 கோடியும், நாகலாந்திற்கு ரூ.1,014 கோடியும், ஒடிசாவிற்கு ரூ.8,068 கோடியும், பஞ்சாபிற்கு ரூ.3,220 கோடியும், ராஜஸ்தானிற்கு ரூ.10,737 கோடியும், சிக்கிமிற்கு ரூ.691 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.* தமிழகத்திற்கு ரூ.7,268 கோடியும், தெலுங்கானாவிற்கு ரூ.3,745 கோடியும், திரிபுராவிற்கு ரூ.1,261 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.31,962 கோடியும், உத்தரகாண்டிற்கு ரூ.1,992 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.13,404 கோடியும் விடுக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

spr
அக் 11, 2024 00:12

இப்படிக் கோடி கோடியாக ஒதுக்கும் நிதி முறையாகச் செலவழிக்கப்படுகிறதா என்பதனைக் கண்காணிக்க வேண்டும் மாநிலத்து ஆளுநர் இதனைக் கண்காணிக்கலாம் இல்லையேல் இவை அனைத்தும் மாநில அரசுகளால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், கொள்ளையடிக்க என்றெல்லாம் வீண் போகும் .


sankaranarayanan
அக் 10, 2024 21:11

இனி தமிழர்கள் தாராளமாக செலவு செய்யலாம் துணை முதல்வர் வந்த அதிருஷ்டம் தான் எல்லாமே. இனி பேனா வைக்கலாம் .சாலைகள் மட்டுவில் சிலைகள் வைக்கலாம். கார் ரேசு போன்று சைக்கிள் ரேசும் வைக்கலாம். தெருவுக்கு தெரு கட்சி கொடி வைக்கலாம் .சாலைகளில் இறந்தவர்களுக்கு எல்லோருக்கும் தலா பத்து லட்சம் கொடுக்கலாம். இளம் தேடி பணம் இளம் தேடி இனாம்.விதவைகளுக்கு மாதம் பத்தாயிரம் கொடுக்கலாம்.


Dhurvesh
அக் 10, 2024 22:17

ஸ்டாலின் சென்றவுடன் மெட்ரோ / இப்போ இதற்கு எல்லாம் ரிலீஸ் ஆகுது எல்லாம் 22 MP படுத்தும் பாடு


GMM
அக் 10, 2024 19:43

மாநிலங்களுக்கு நிதி பகிர்மாணம் காங்கிரஸ் வகுத்த ஊழல் முறை. மாநிலங்கள் பத்திர பதிவு, டாஸ்மாக்.. போன்றவை மூலம் தேவைக்கு அதிக நிதி பெற்று வருகின்றன. உருப்படியாக ஒரு வேலையும் யில்லை. மத்திய அரசு சாலை, இரயில், விமானம், துறைமுகம், பாதுகாப்பு போன்ற முக்கிய செலவுகளை ஏற்று கொள்ள வேண்டிய நிலை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் தெரு சுத்தம் முதல் சுடுகாடு வரை முக்கிய நகர் நல பணிகள். நிதியில்லாமல் ஊர்கள் பொலிவிழந்து விட்டன. அதிக நிதி நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகம் தேவை.


Pandi Muni
அக் 10, 2024 19:07

7,268 கோடி ஸ்வாகா


Ramamurthy N
அக் 10, 2024 18:22

திரு ஆரூராரே, எந்த மாநிலத்தில் ஊழலே இல்லை என்று சொல்லுங்கள்? திரு காமராஜர் கூறியது போல் எல்லோரும் ஊழல்வாதிகள் தான். தமிழ்நாட்டின் கொஞ்சம் பர்சன்டேஜ் அதிகம். மத்திய அரசு நினைத்தால் மட்டுமே சட்டம் கொண்டு வந்து ஊழலை ஒழிக்க இயலும். மக்களும் லேட்டானாலும் பரவாயில்லை, லஞ்சம் கொடுக்க முடியாது என்று குறுக்கு வழியை கைவிட வேண்டும். இதற்காக தானே நமது பாரத பிரதமர் ரூபாய் பரிவர்த்தனையை குறைத்து டிஜிட்டல் பணத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். எந்த ரூபாய் நோட்டும் செல்லாது என்று அறிவித்தால் ஊழல் நடைபெறாது.


Rpalnivelu
அக் 10, 2024 18:21

அதிலே முக்கால் பாகம் முதல் குடும்பத்துக்கே போய் சேர்ந்துடும்.


Tetra
அக் 10, 2024 17:48

இனி தமிழ் ஊடகங்களுக்கு ஜாலியோ ஜாலிதான். தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என்று திமுக அல்லக்கைகள், போராளிகள் ஊளையிட்டு விவாதிப்பார்கள். மோடியையும், நிர்மலா சீதாராமனையும் விளாசுவார்கள் .


ஆரூர் ரங்
அக் 10, 2024 16:39

இப்பத்தானே மாநிலத் திட்டமான மெட்ரோ 2 க்கு பெரிய தொகை கொடுத்தாங்க? மறுபடியும் எதுக்கு? ஊழல் ஆட்சிக்கு டூ மச்.


Palanisamy Sekar
அக் 10, 2024 16:39

தீபாவளி போனஸ் கிடைத்த சந்தோசம். இனியென்ன.. ஹ்ம்ம் ஜமாய்ங்க..உங்க காட்டுல ஒரே மழைதான்.


raja
அக் 10, 2024 16:13

அப்புறம் என்ன திட்டங்களை தீட்டி ஒரே நக்க நக்கிட வேண்டியதுதான்... விடியல்...


சமீபத்திய செய்தி