உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள்: பட்ஜெட் ஸ்பெஷல்!

5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள்: பட்ஜெட் ஸ்பெஷல்!

புதுடில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் விவரம் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0w4l05hc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.* பதிவு செய்யப்பட்ட சிறு தொழில் துறையினருக்கு ரூ 5 லட்சம் கடன் வழங்கப்படும்.* பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 கோடி கடன் உதவி வழங்கப்படும்.* சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக அதிகரிப்பு.* பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற்றப்படும்.* அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்.* மாணவர்களுக்கான பாடங்களை தாய் மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.* பீஹாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.* மருத்துவ படிப்புக்கு கூடுதலாக பத்தாயிரம் இடங்கள் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் * ஐ.ஐ.டி.,களில் இந்த ஆண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.* அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி ஏற்படுத்தப்படும்.* பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி.,கள் விரிவுபடுத்தப்படும். * உடான் திட்டத்தின் கீழ் 120 புதிய வழிதடங்களில் விமான சேவை துவங்கப்படும்.* ரூ.1கோடியில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.* நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.* ஸ்விக்கி, சொமோட்டோ நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.* கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி.* 2047க்குள் 100 கிகாவாட் அணு மின் உற்பத்தி செய்ய திட்டம்.* சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GMM
பிப் 01, 2025 14:13

மருத்துவ படிப்பிற்கு கூடுதல் இடங்கள். படித்த பின் மருத்துவ சேவை செய்யாமல் அரசியலில் சென்றால் ராம்தாஸ், அன்புமணி போன்றவர்களுக்கு அரசின் நிலைபாடு என்ன? மருத்துவ செலவை மீட்ட வேண்டும். ஏராளமான படிப்புகள். அதிக நிதி விரயம். சம்பாதிக்க, வேலை செய்ய தெரியாதவர்கள் பல படிப்பு படித்து என்ன பயன்? எந்த இழப்பையும் ஈடு செய்து அரசு செயல்பட வேண்டும்.


அப்பாவி
பிப் 01, 2025 13:11

ஐ.ஐ.டி , என்.ஐ.டி, டாக்டருன்னு படிச்சுட்டு வெளிநாட்டுக்கு வேலக்கு போயிடுங்க. இங்கே வேலையெல்லாம் கிடையாது.


Mediagoons
பிப் 01, 2025 13:00

இயற்கை மின்சாரத்தை காணோம் . கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி அணு மின்சாரத்திற்கு வரலாறு காணாத முக்கியத்துவம் இலக்கு. இது மக்கள் விரோத காட்டுமிராண்டிகள் அரசு என்பதற்கு சிறந்த உதாரணம்


ஆரூர் ரங்
பிப் 01, 2025 13:52

உங்களுக்கெல்லாம் கை விசிறி போதுமே. இயற்கையான காற்று.


veera
பிப் 01, 2025 14:55

அறிவிலி. கூன் இயற்கை மின்சாரம் pm surya ghar.... மின்சார வாரியம். ஒரு லட்சம் கணக்கில் வெறும் 20000 இணைப்பு மட்டுமே கொடுத்திருக்க.


அப்பாவி
பிப் 01, 2025 12:53

வெத்து வேட்டு பட்ஜெட் மாதிரி தெரியுதே... மக்களின் வேலைவாய்பை பெருக்க ஒரு திட்டமும் இல்லை. கடன் குடுத்தா வேலை வாய்ப்பு பெருகிடுமா ?


guna
பிப் 01, 2025 14:45

ஓசியில் வேலை வருமா...ஒப்பாரி போய் வேலையை தேடுங்கட


முக்கிய வீடியோ