கன்டெய்னரில் தீப்பிடித்து 8 கார்கள் சேதம்
ஹைதராபாத் : தெலுங்கானாவில் கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில், அதில் ஏற்றி செல்லப்பட்ட எட்டு கார்கள் முற்றிலும் எரிந்து சேதமாயின.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத் நோக்கி கன்டெய்னர் லாரி, புதிய கார்களை ஏற்றிக்கொண்டு நேற்று வந்தது.சங்கர்ரெட்டி மாவட்டத்தின் ரஞ்ஜோல் பகுதியில் ஜகீராபாத் நெடுஞ்சாலையில் வந்தபோது, கன்டெய்னரில் திடீரென கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. கன்டெயினரை, சாலையோரமாக டிரைவர் நிறுத்தினார்.தீயணைப்புத் துறையினர் போராடி கன்டெய்னரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டு கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.