உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்பு: ஐ.நா., பொதுச்சபை தலைவர் பாராட்டு

80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்பு: ஐ.நா., பொதுச்சபை தலைவர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'ஸ்மார்ட்போன் உதவியால், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்' என ஐ.நா., பொதுச்சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பாராட்டு தெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. 2016ல் ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு அரசு சார்பில் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டன. வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. பல்வேறு அரசு திட்டங்களுக்கு அவர்களின் வங்கியில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.

வணிகங்கள்

இந்நிலையில், ஐ.நா., பொதுச்சபையில் அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பேசியதாவது: இந்தியாவில் உள்ள கிராமப்புற விவசாயிகள் வங்கியில் கணக்குகளை துவங்காமல், எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தனர். தற்போது தங்களது அனைத்து வணிகங்களையும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ஆன்லைனில் செய்கின்றனர் . வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களது பணத்தை ஆன்லைன் மூலம் பெறுகின்றனர்.

தொழில்நுட்பங்கள்

இந்தியாவில் டிஜிட்டல் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களுக்கும் வங்கி சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படுவது பாராட்டுக்குரியது. ஸ்மார்ட்போன் உதவியால் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பங்கள் அடிப்படை தேவையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kanns
ஆக 03, 2024 10:56

Foreign Agents of PowerMisusing Ruling Party& Bureacrats


A.Gomathinayagam
ஆக 02, 2024 14:00

வறுமை அறியும் அளவுகோல் இன்னும் ஐந்து ஆண்டுகாலம் மாறாமல் அப்படியே வைத்திருந்தால் நூறு விழுக்காடு மக்கள் வறுமையில் இருந்து மீண்டு விடுவார்கள்


Subash BV
ஆக 02, 2024 13:45

FINALLY GUYS HAVE ACCEPTED CONGRATS


RAMAKRISHNAN NATESAN
ஆக 02, 2024 12:53

நாங்க எப்பவோ இருநூறு இருநூறா வாங்கிக் குவிச்சு மீண்டுட்டோமே .....


Anand
ஆக 02, 2024 12:45

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்களவாணிகளை அழித்தொழித்தால் மிச்சமீதி வறுமையில் உள்ளவர்களும் உடனடியாக மீட்கப்படுவர்.


ES
ஆக 02, 2024 12:42

Biggest lie ever disgrace


Kumar Kumzi
ஆக 02, 2024 13:30

ஊப்பீஸ் இருநூறு ஓவாவுக்கு எப்போதும் ....


hari
ஆக 02, 2024 18:04

ES is briiliant knowledge man.... all please agree


hari
ஆக 02, 2024 18:05

sad....only ES under poverty line.....


Mali
ஆக 02, 2024 11:57

சுயஅறிவு இல்லாத மூடர் கூட்டமும் இருக்கும் வரையில் 100% வறுமையை ஒழிக்க முடியாது.


Francis
ஆக 02, 2024 11:47

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் ... இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...


Kumar Kumzi
ஆக 02, 2024 13:27

வட்டிக்கான் போப்பிடம் கேட்டு பாரு உண்மை தெரியும்


Kumar Kumzi
ஆக 02, 2024 11:40

ஐயா டாட் இந்தியா கம்பெனியை இப்புடியா கடுப்பேத்துறது


Swaminathan L
ஆக 02, 2024 11:34

வறுமை விடுபடல் குறியீடு தனிநபர் ஒரு நாளைக்கு இருபத்தாறு- நாற்பது ரூபாய் அளவில் வருமானம் இருந்தால் போதும் என்கிற அளவில் இருக்கிறது. இது உள்ளபடியே போதுமா, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் இந்தக் கணக்கில் ஒரு நாளைக்கு நூற்றிருபது ரூபாய் சம்பாதித்தால் என்ன மாதிரி வறுமையில் இருந்து எப்படி மீண்டதாகக் கருத முடியும் என்று புரியவில்லை. ரேஷனில் உணவு தானியம் ஒருவருக்கு மாதத்துக்கு ஐந்து கிலோ அளவில் இலவசமாகக் கிடைக்கிறது இந்த பிபிஎல் குடும்பங்களுக்கு.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ