மேலும் செய்திகள்
439 தேர்தல் விதிமீறல் வழக்குகள்
22-Jan-2025
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தேர்தல் நடத்தை விதிகள் ஜனவரி 7ம் தேதி அமலுக்கு வந்தன. அன்று முதல் 29ம் தேதி வரை பல்வேறு விதிமீறல் தொடர்பாக மொத்தம் 863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த காலகட்டத்தில் மொத்தம் 27,551 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 415 சட்டவிரோத துப்பாக்கிகள், 473 தோட்டாக்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. ஆயுதச் சட்டத்தின் கீழ் 426 பேர் கைது செய்யப்பட்டனர்.96,957 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது. 72.8 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 165.876 கிலோ போதைப்பொருட்கள், 1,200க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தவிர ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9.67 கோடி ரூபாய் ரொக்கம், 37.39 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -
22-Jan-2025