உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 90 டிகிரியில் மேம்பால திருப்பம்: ம.பி.,யில் பீதி

90 டிகிரியில் மேம்பால திருப்பம்: ம.பி.,யில் பீதி

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில், 90 டிகிரியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் டிசைன், பயணியரின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கேள்வியையும் எழுப்பி உள்ளது.போபாலின் ஐஷ்பாக் ஸ்டேடியம் அருகே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,126 அடி நீளத்திலும் 28 அடி அகலத்திலும் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஐஷ்பாக் ரயில்வே கிராஸிங்கில் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாததால், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் தினந்தோறும் பயனடைவர். இந்தநிலையில், பாலத்தின் முடிவில் உள்ள 90 டிகிரி கோணம், கடும் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இந்த திடீர் வளைவு விபத்து ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. குறிப்பாக மோசமான வானிலை அல்லது வெளிச்சம் குறைவாக இருக்கும்போது பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய பிரதேச பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக இந்த வடிவமைப்பு தவிர்க்க முடியாதது என்றும் மெட்ரோ நிலையம் இருப்பதால் வேறு வழியில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில் தேவையில்லாத அபாயங்களைக் குறைக்க, பாலத்தில் சிறிய வாகனங்களை மட்டுமே அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும், வேக விதிமுறைகள் உட்பட இந்திய சாலை பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி வாகனங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Nandakumar
ஜூன் 16, 2025 08:38

V டைப்ல தான் மொதல்ல டிசைன் பண்ணாங்க, அப்புறம் 90 டிகிரிய மாத்துனாங்க.


ராஜா
ஜூன் 15, 2025 07:46

வடக்கன்ஸ் கையில் நாடு அகப்பட்டால் அவ்வளவுதான்


Varuvel Devadas
ஜூன் 13, 2025 15:37

It seems the Engineers have superb brains. Even a simple mason will design a better layout, but these fools proved that they are branded fools.


J.Isaac
ஜூன் 13, 2025 10:46

சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் இந்தியர்களை போல் வேறு எந்த நாட்டிலும் இருக்காது


சாமானியன்
ஜூன் 13, 2025 10:14

ஹைமாஸ்க் லைட் போட்டுவிடுங்கள். பிரச்னை தீரும்.


venugopal s
ஜூன் 13, 2025 09:28

புத்திசாலிகள் நிறைந்த பாஜக ஆளும் மாநிலம் ஆச்சே, இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்!


veeramani
ஜூன் 13, 2025 08:58

ஒரு சில காரணங்களுக்கு உட்பட்டு 90 டிகிரி வளைவு பாலம் கட்டலாம். வளைவிற்கு முன்னர் நிச்சயம் ஸ்பீட் பிரேக்கர் அமைக்கவேண்டும். சிறிய வாகனங்களை சுமார் 20 கி ,மீ வேகத்தில் பயணிக்கச்சொல்லவேண்டும்


Nandakumar
ஜூன் 16, 2025 08:35

என்ன காரணம்?


Mario
ஜூன் 13, 2025 08:45

பிஜேபி ஆட்சி


அப்பாவி
ஜூன் 13, 2025 06:47

ம.பி தானே... மெத்தப் படிச்ச இஞ்சினீயர்கள் இருக்காங்க.


Natarajan Ramanathan
ஜூன் 13, 2025 04:59

என்ன விளக்கம் சொன்னாலும் இது மிகவும் அபாயகரமான பலமாகவே தோன்றுகிறது. கண்டிப்பாக அந்த தொண்ணூறு டிகிரி சரி செய்து வளைவாக மாற்றப்படவேண்டும்.


சமீபத்திய செய்தி