உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிகளில் மாணவிகளுக்கு 97.5 சதவீதம் தனி கழிப்பறை வசதி: கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

பள்ளிகளில் மாணவிகளுக்கு 97.5 சதவீதம் தனி கழிப்பறை வசதி: கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட நாட்டில் உள்ள 97.5 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் தலைவரும் சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு விசாரணையில் மத்திய அரசு கூறியதாவது:டில்லி, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன.மேலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு 16 லட்சம் கழிப்பறைகளும், மாணவியருக்கு 17.5 லட்சம் கழிப்பறைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு 2.5 லட்சம் கழிப்பறைகளும், மாணவியருக்கு 2.9 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் 99.9 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 98.8 சதவீதம், தமிழகத்தில் 99.7 சதவீதம், கேரளாவில் 99.6 சதவீதம், சிக்கிம், குஜராத், பஞ்சாபில் 99.5 சதவீதம், சத்தீஸ்கரில் 99.6 சதவீதம், கர்நாடகாவில் 98.7 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 98.6 சதவீதம், மகாராஷ்டிராவில் 97.8 சதவீதம் , ராஜஸ்தானில் 98 சதவீதம், பீகாரில் 98.5 சதவீதம், ஒடிசாவில் 96.1 சதவீதம், காஷ்மீரில் 89.2 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Oviya Vijay
நவ 02, 2024 22:38

97.5%??? மத்திய அரசின் உருட்டுக்கு இன்னொரு சான்று இது. உங்களை அடித்துக் கொள்ள வேறு ஆட்கள் இல்லை பாஸ்... நீங்க நடத்துங்க...


Ramesh Sargam
நவ 02, 2024 22:25

மாணவிகளுக்கு என்று கழிப்பறை வசதி ஏட்படுத்தி தரவேண்டும் என்று நீதிமன்றம் தலையிட்டு நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் நம் நாட்டில். வெட்கம். வேதனை. மாணவர்கள் எங்கே போவார்கள்? அவர்களுக்கும் கழிப்பிடம் தேவைதானே? அவர்களுக்கும் கழிப்பிட வசதி ஏட்படுத்தி தரவேண்டும் என்று நீதிமன்றம் என்றைக்கு நிர்பந்திக்கும்?


புதிய வீடியோ