உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளாவுக்கு 992 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு

கும்பமேளாவுக்கு 992 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில்வே அமைச்சகம், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள கும்பமேளாவுக்கு 992 சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: வரும் 2025 ஜனவரியில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா திருவிழா நடைபெற உள்ளது. ஹிந்துக்களின் மிக முக்கிய திருவிழாவாக திகழும் கும்பமேளாவில் பங்கேற்க, அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள். பயணிகள் வசதிகளுக்காக, 992 சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.933 கோடி, ஒதுக்க முன் வந்துள்ளோம். பிரயாக்ராஜில், ரயில்வே டிராக்குகள் அமைப்பதற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கப்படுகிறது. இதனால், பிரக்யாராஜின் துணை பகுதிகளுக்கு விரைவாக, எளிதாகவும் செல்ல முடியும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

konanki
அக் 01, 2024 11:37

2012 கும்ப மேளா சென்ற அனுபவம் மிக சிறந்தது. 2024 இன்னும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்ற ஆவலுடன் இந்த நடவடிக்கை வரவேற்பு


J.Isaac
செப் 30, 2024 14:22

மக்களின் குணம் பேச்சில்,நடத்தையில் செயலில்மாற்றம் கொண்டு வருமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை