உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் தவிப்பு

ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டம் மாணிக் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் நேற்று மாலை 5 மணி அளவில் திறந்த வயல் வெளியில் விளையாடிகொண்டிருந்தனர். அப்போது அங்கு திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்தான்.தகவலறிந்த கிராமத்தினர் சிறுவன் விழுந்தது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின் மாநில பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சிறுவன் 60 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மீட்பு பணிகள் இரவை தாண்டியும் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ