உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 10 நாட்களுக்கு பின் மீட்பு

ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 10 நாட்களுக்கு பின் மீட்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், விழுந்த 3 வயது பெண் குழந்தை 10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் கடந்த 2023 டிச.,23ம் தேதியன்று சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை விளையாடி கொண்டு இருந்த போது கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் , தேசிய மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஜன. 01) இரவு குழந்தை மாக மீட்டு சுய நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sakthi
ஜன 01, 2025 21:15

ஆண்டவா அந்த குழந்தையை காப்பாற்று


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2025 21:07

இறந்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2025 21:05

உணவில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் 10 நாட்கள் கழிந்தும் உயிருடன் இருந்தது ஆச்சரியமே ... முழு உடல் நலம் பெறட்டும் என்று பிரார்த்திப்போம் ....


Ramesh Sargam
ஜன 01, 2025 20:16

இந்த ஆழ்துளை கிணறு விபத்துக்களுக்கு முடிவே கிடையாதா? இதுபோன்ற விபத்துக்கள் வேறு எந்த வளர்ந்த நாடுகளிலும் நடப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இந்தியா இது போன்ற விசயத்தில் வளரவில்லை...


MUTHU
ஜன 01, 2025 21:35

பிரிட்டிஷ் அரசு சொன்னது போல் இந்தியர்கள் பொறுப்பற்றவர்கள். பிரச்சினைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இது போன்ற நிகழ்வுகள் மனதை வலிக்க செய்கின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை