உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெறுப்புணர்வில் மூழ்கியிருக்கும் நாடு வளர்ச்சி பெறாது: ராகுல்

வெறுப்புணர்வில் மூழ்கியிருக்கும் நாடு வளர்ச்சி பெறாது: ராகுல்

ரேபரேலி : '' வெறுப்புணர்வில் மூழ்கியிருக்கும் நாடு வளர்ச்சி பெறாது, '' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான ரேபரேலி சென்றார். ஹனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பிறகு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:மீடியாக்கள் பிரதமர் மோடி, அம்பானி, அதானியின் நண்பர்களாக உள்ளனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவர்களது பணி. அரசு தவறு செய்தால், அதற்கு அவர்களை பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும். ஆனால், அந்த பணியை சரியாக செய்யவில்லை.நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரும், அரசியலமைப்பிற்காக போராடினர். இன்று, ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளின் குரல் உள்ளது என்றால், அதற்கு அரசியலமைப்பே காரணம். அரசியலமைப்பே இந்தியாவின் குரலாக உள்ளது. மஹாத்மா காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் அரசியலமைப்பை கொடுத்தனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறை சென்றனர். அவர்கள் அரசியலமைப்பிற்காக போராடினர். இந்த அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. மீடியாக்களின் கடமை. ஆனால், மீடியாக்கள் இன்று அது குறித்து பேசாத காரணத்தினால், நான் அதனை பேசுகிறேன். விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்கட்டமைப்புகள் நிலக்கரி, ரயில்வே என அனைத்தும் விற்கப்படுகின்றன. காங்கிரஸ் தெருவில் இறங்கி போராடுகிறது. மீடியாக்கள் நமக்கு உதவி செய்யவில்லை. ஆனால், நாங்கள் போராடி தொடர்ந்து வெற்றி பெறுவோம். பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பா.ஜ., அரசு முதலாளிகளை மட்டும் ஆதரித்து வருகிறது.வெறுப்புணர்வில் மூழ்கியிருக்கும் நாடு எப்போதும் வளர்ச்சி பெறாது. இதனால் தான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டேன். அப்போது, இந்த நாடானது அமைதி மற்றும் அன்புக்கான நாடு. வெறுப்புணர்வுக்கு ஆனது கிடையாது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தேர்தலை சரியாக எதிர்கொள்ளாதது ஏன்? பா.ஜ.,விற்கு எதிராக எங்களுடன் இணைந்து அவர் போராட வேண்டும். ஆனால், மாயாவதி சில காரணங்களுக்காக அவர் போராட தயங்குகிறார். இது எனக்கு கவலையை தருகிறது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தால், பா.ஜ.,வால் உ.பி.,யில் வெற்றி பெற முடியாது. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

V.Mohan
பிப் 21, 2025 19:28

வெறுப்புணர்வை நாட்டில் வளர்ப்பது யாராம்??.பாஜக மீதும், மோடி மீதும் வெறுப்பை உமிழ்வது திரு.கார்கேயும் நீங்களும்தான் ஐயா. இண்டி கூட்டணி ஆட்கள் மம்முதா தீதீயும்,கெஜ்ரிவாலும்,பினாரயி விஜயனும், சுடாலினும் தாங்கள் வெறுப்பது மட்டுமுள்ள தாங்கள் ஆட்சி செய்ய பிச்சை போட்ட அமைதி மார்க்க ஆசாமிகள் யார் வேண்டுமானாலும் மோடிஜி அவர்கள் மீது அர்த்தமின்றி வெறுப்பை உமிழ்வது என்ன காதல் பேச்சா?. வெறுப்பு, சகிப்புத்தன்மை இல்லாமை, பொறாமை இவைதானே உங்கள் அடையாளம்????


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 15:12

இந்திய பொருளாதார திருட்டு கூட்டம் சீன அடிமை.


RAAJ68
பிப் 21, 2025 14:30

இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் போய் பிரச்சாரம் செய்கிறீர்கள் நீங்கள் தேச துரோகி உங்களை நாடு கடத்தாமல் மோடி விட்டு வைத்திருப்பது கூட திருஷ்டம். அறுபது ஆண்டுகளாக இந்திய நாட அடித்தது காங்கிரஸ். 2ஜி பணம் எல்லாம் எங்கே போய் உள்ளது மோடி அரசை இன்னும் ஏன் மெத்தனமாக உள்ளது என்று புரியவில்லை.


Dharmavaan
பிப் 21, 2025 12:29

ராகுல்கான் வாயை மூடியிருந்தாலே நாடு முன்னேறும்


Ganapathy
பிப் 21, 2025 12:22

உன்னய பாத்தாதான் வெறுப்பாக இருக்கு.


ManiK
பிப் 21, 2025 10:50

ராவுல்க்கு தாய்லாந்து மக்கள் மேல் வெறுப்பே கிடையாது. இந்தியர்கள் அதுவும் தேச உணர்வாளர்கள் மேல் தான் வெறுப்பு, வன்மம். மக்களை பிரிப்பாத கனவு காண்பதில் ராவுலுக்கே முதலிடம்.


vbs manian
பிப் 21, 2025 09:08

காழ்ப்புணர்ச்சியில் ஊறியிருக்கும் வரை காங்கிரஸ் தேறாது.


Sridhar
பிப் 21, 2025 08:59

இவனுக்கும் இவனை சுற்றி இருக்குற ஆட்களுக்கும் மட்டும்தான் வெறுப்பு மேலோங்கி இருக்குது. இந்த லச்சணத்துல நாட்டு மக்கள் எல்லோரும் வெறுப்பு காட்டிட்டு இருக்கங்கங்கற பெரும்பழியை மக்கள் மீது வைக்க இவனுக்கு எப்படி துணிவு வந்தது? மக்கள் இவன் மீதும் இவன் குடும்பத்தார் மீதும் செம வெறுப்பில் இருக்கிறார்கள் என்பது என்னமோ உண்மைதான். பின்னே ஏழை மக்களின் செல்வங்களை 50 வருசமா சூறையாடினா வெறுப்பு காண்பிக்காம கொஞ்சவா செய்வாங்க? இவனை போன்ற ஆட்கள் "அன்பு" "அன்பு" னு பிரச்சாரம் செய்ய முயற்சிக்கறதே ஒரு மதத்திற்கு வேண்டிதானோ?


பேசும் தமிழன்
பிப் 21, 2025 08:26

பப்பு அப்போ நீங்க இருக்கும் நாடு வெற்றி பெறாது.. அப்படி தானே.. முதலில் இடத்தை காலி செய்து விட்டு.. உன் அபிமான பாகிஸ்தான்.. இத்தாலி... அல்லது சீனா நாட்டில் போய் அடைக்கலமாகி விடு.. அது தான் எங்கள் நாட்டுக்கு நல்லது.


R.Subramanian
பிப் 21, 2025 07:59

ராகுல் பேசுவது அன்பு ஆனால் செயலில் வெறுப்பு. திராவிட சித்தாந்தம் போல் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று வெளியில் பேசுவார்கள் ஆனால் வளர்த்தது ஆங்கிலத்தை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை