உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணு ஆயுத சோதனை விவகாரத்தில் தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

அணு ஆயுத சோதனை விவகாரத்தில் தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

புதுடில்லி: “தேச பாதுகாப்பு அல்லது அணு ஆயுத சோதனை விவகாரங்களில், இந்தியா வேறு நாட்டின் உத்தரவின் படியோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ முடிவு எடுக்காது; நாட்டு நலன்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அரசு முடிவுகளை எடுக்கும்,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சி-ங்கிடம், 'அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தும்' என, அந்நாட்டு அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தது தொடர்பாகவும், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துகிறது எனக் கூறியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராஜ்நாத் சிங் அளித்த பதில்:இந்தியா என்ன செய்யும் என்பதை எதிர்காலம் சொல்லும். அமெரிக்கா அல்லது பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்வதால், இந்தியாவுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாது. அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனரோ அதை செய்யலாம். தகுந்த நேரத்தில், நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ, அதை சரியாக செய்வோம். தேச பாதுகாப்பு அல்லது அணு ஆயுத சோதனை விவகாரங்களில், வேறு நாட்டின் உத்தரவின் படியோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ இந்தியா முடிவு எடுக்காது-. நாட்டு நலன்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அரசு முடிவுகளை எடுக்கும். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் தரப்பில் இருந்து போரை நிறுத்துவது தொடர்பாக தொலைபேசி அழைப்புகள் வந்தன. பலமுறை அழைப்பு வந்தும், நாம் அடைய வேண்டியதை அடைந்த பின்பே, நம் நடவடிக்கையை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம். தேவைப்பட்டால், நாம் அதை மீண்டும் செய்வோம். இந்த போர் நிறுத்தம், இந்தியா - பாகிஸ்தான் இடையில்தான் நடந்தது. இதில், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பாக்.,கிற்கு புதிதல்ல

ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து, நம் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: பாகிஸ்தானின் ரகசியமான மற்றும் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் புதிதல்ல; இது, அந்நாட்டு வரலாற்றின் பிரதிபலிப்பு. ஏ.க்யூ., கான் நெட்வொர்க் மூலம் அணு ஆயுத பரவலை அந்நாடு தொடர்ந்து அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவற்றை, சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதில் இந்தியா எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி, சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை