உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க பாதுகை சுமந்து அயோத்தி நோக்கி பாத யாத்திரையாக வரும் ராமபக்தர்

தங்க பாதுகை சுமந்து அயோத்தி நோக்கி பாத யாத்திரையாக வரும் ராமபக்தர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதாராபாத்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ராமருக்கு தங்க பாதுகையை காணிக்கை படைக்க ஐதராபாத்தைச்சேர்ந்த ராம பக்தர் 8 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரையாக அயோத்தி நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அயோத்தியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழா நெருங்கி வருவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீராமர் கோவில் கட்டுமான குழு தலைவருமான நிருபேந்திர மிஸ்ரா உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்அவரது அரசும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச்சேர்ந்த சல்லா ஸ்ரீனிவாச சாஸ்திரி 65 என்ற ராமபக்தர், ரூ. 65 லட்சம் செலவில் ராமருக்கு தங்க பாதுகையை (தங்க காலணி) காணிக்கையாக செலுத்த உள்ளார். இதற்காக கடந்த (2023) ஆண்டு ஜூலை மாதம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து துவங்கி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி நோக்கி 8 ஆயிரம் கி.மீ. பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று அயோத்தி சென்றடைந்து தங்க பாதுகையை முதல்வர் யோகி ஆதி்த்யநாத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சல்லா ஸ்ரீனிவாச சாஸ்திரி கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றேன். “எனது தந்தை தீவிர ஹனுமன் பக்தர் . அயோத்தியில் கரசேவை நடந்த போது பங்கேற்றார். அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்கு கோயில் அமைவதை பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. ஆனால், அவர் இப்போது இல்லை. எனவே அவரது கனவை நனவாக்க விரும்புகிறேன். ஸ்ரீ ராமர் வனவாசத்தின்போது அயோத்தியிலிருந்து ராமேசுவரம் சென்ற வழியை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தேன். அவ்வழியே எனது பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறேன். ஏற்கனவே ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ஐந்து வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்கினேன். தற்போது பஞ்ச உலோகங்களில் தயாரிக்கப்பட்ட பாதுகையை அயோத்தி ஸ்ரீராமருக்கு காணிக்கையாக கொடுக்க கொண்டு செல்கிறேன்.இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அயோத்தியை அடைந்துவிடுவேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்புசாமி
ஜன 07, 2024 12:13

65 லட்ச ரூவாய் எங்கிருந்து வந்தது? இவர் வருமானத்துறை அதிகாரியாம். புரியுது. புரியுது. ராமருக்கு எல்லாம் தெரியும்.


Barakat Ali
ஜன 07, 2024 14:42

ஓய்வு பெற்றவர் ......... அதாவது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதிகாரியாகப் பணியில் இருந்தவர் .....


R SRINIVASAN
ஜன 07, 2024 08:23

டாஸ்மாக்கில் பணத்தைக் கொட்டுவதை விட இது ஒன்றும் தவறல்ல .


Ramesh Sargam
ஜன 07, 2024 01:09

போகும் வழியில் கள்வர்கள் யாரிடமும் இவர் சிக்க கூடாது, ராமா..


PRSwamy
ஜன 06, 2024 22:28

Swami Desikan அருளித்த பாதுகா சஹஸ்ரத்தில் அக்ராமணிமாலா பாராயணம் செய்தால் இப்போது உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு மிகவும் நல்லது.


Matt P
ஜன 06, 2024 22:26

தலையில வைக்கும் கிரீடத்திற்கு தங்கம் சரி. கடவுளா இருந்தாலும் கால்l போடும் பாதுகைக்கு தங்கம் venumaa? ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ஐந்து வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்கினேன்...வெள்ளி தங்கம் இப்படியே காலத்தை ஓட்டுங்க. எல்லாமே vellliyaa இருந்தால் வெள்ளி செங்கல்களால் கோயில் என்று பெருமைப்பட்டு கொள்ளலாம். இருப்பவன் கொடுப்பான் இல்லாதவன் எங்கே povaan?.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2024 21:49

அவரு பயணப்படுறது எட்டாயிரம் கிலோமீட்டருங்களா ???? காஷ்மீர் டூ கன்யாகுமரி இடையே கூட 3700 கிலோமீட்டர் கூட இல்லீங்களே ????


RAMAKRISHNAN NATESAN
ஜன 07, 2024 09:11

நம்பலைன்னா தேசத்துரோகி ன்னு சொல்லிடுவோம் .....


Seshan Thirumaliruncholai
ஜன 06, 2024 21:09

ராமாயணத்திற்கு பெருமை பரதன் ஆராதித்த ஸ்ரீ ராம பாதுகை. ஸ்வாமி நிகமாந்த தேசிகன் ரகுவீரனை குறித்து ரகுவீர கத்யம் இயற்றியுள்ளார். ராமர் திருஆராதனம் செய்த ஸ்ரீ ரெங்கநாதன் பாதுகை பற்றிய பாதுகா சஹஸ்ரம் இயற்றியுள்ளார். எழுந்து அருளப்படும் பாதுகையுடன் மேலே கூறிய ஸ்தோத்திரங்களை சொல்லிவரலாம்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை