மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
பத்து ஏக்கர் தரிசு நிலத்தில் ஏலக்கி வாழை பயிரிட்டு, சாகுபடி செய்து ஊர் மக்களை, விவசாயி ஒருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.கோலார் மாவட்டம், மாலுாரின் ஹோபாலி ஷேத்ரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், தனது 10 ஏக்கர் நிலத்தில் 'ஏலக்கி வாழை' பயிரிட்டுள்ளார். எந்த நஷ்டமும் இன்றி வருமானம் ஈட்டி வருகிறார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:ஏலக்கி வாழைப்பழம் வாங்க இடைத்தரகர்கள் தேவையில்லை. வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளின் பண்ணைகளுக்கு வந்து, ஒரு கிலோவுக்கு விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்கின்றனர்.எனவே, விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையில் இடைத்தரகர்கள் பிரச்னை இல்லை. பண்டிகை காலங்களில் ஏலக்கி வாழைப்பழத்துக்கு அதிக கிராக்கி இருப்பதால், வியாபாரிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து உள்ளனர். சாகுபடி செய்யும் முறை
வயலில் ஒன்றரை அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டும். ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு குறைந்தது, ஏழு அடி இடைவெளி விட்டு, வாழையை நடவு செய்ய வேண்டும். நடவு செய்து ஒரு மாதம் கழித்து, கன்றுகள் முளைக்க துவங்கும். வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், உரம் இட வேண்டும். எட்டு முதல் பத்து மாதங்களில் வாழை குலை தள்ளும். மற்ற ரகங்களுடன் ஒப்பிடும்போது, ஏலக்கி வாழையில் நோய்கள், பூச்சிகள் தாக்குவது குறைவு. நடவு செய்ய ஏக்கருக்கு 1,200 கன்றுகள் தேவைப்படலாம். தென்னை, நிலக்கடலை, இதர பயிர்களுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிடலாம்.ஏலக்கி வாழை கன்றுகள் குறைந்தது எட்டு முதல் 12 அடி உயரம் வளரும். காற்றின் வேகம் சிறிது அதிகமாக இருந்தாலும், வாழை மரம் முறிந்து விழும். இதற்கும் தீர்வு காணலாம்.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வீசும் சூறைக்காற்று, வாழையை பாதிக்காமல் இருக்க, கிழக்கு மற்றும் மேற்கு திசையில், ஏழு அடி இடைவெளியில் கன்று நடவு செய்யப்படும். இதனால் எவ்வளவு காற்று வீசினாலும், செடிகளுக்கு பிரச்னை இல்லை.வாழை தோட்டத்திலேயே இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. செடியை ஒட்டி வளரும் தேவையற்ற களைகள், பத்து நாட்களுக்கு ஒருமுறை அகற்றப்படுகிறது. சூரிய ஒளி
தோட்டத்தில் காய்ந்த இலைகள் ஏராளமாக கிடப்பதால், சூரிய ஒளி தரையில் படாமல் இருக்க, கன்றுகளுக்கு இடையே 'மூடி'யாக பரப்பிவைக்கிறோம். இந்த உலர்ந்த இலை உறை மீது, சுண்ணாம்பு துாள் துாவி, தண்ணீர் ஊற்றப்படுவதால் உரமாகிறது. கோடை காலத்தில் மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.காய்கறி பயிர்களை வளர்ப்பதற்கு பதிலாக, விவசாயிகள் தைரியமாக வாழை பயிரிடலாம். இதை பயிரிடும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். பண்டிகை காலங்களிலும் தேவை அதிகமாக இருக்கும். பணத்துக்காக காத்திருக்க தேவையில்லை. கையில் பணத்தை வைத்து வாழையை அறுவடை செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago