உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி

சித்ரதுர்கா: விளையாடி கொண்டிருந்த போது, கால் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து, 1 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் ஜாதவ், 30. இவரது மனைவி தத்தா, 27. இந்த தம்பதியின் 1 வயது குழந்தை பியா. மனைவி, குழந்தையுடன் சித்ரதுர்கா ஹலியூரில் ஜாதவ் வசித்தார். நேற்று காலை வீட்டிற்குள் விளையாடி கொண்டிருந்த, பியாவை திடீரென காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் குழந்தையை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.குழந்தையை யாராவது கடத்தி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். இந்நிலையின் வீட்டின் அருகே உள்ள, தண்ணீர் தொட்டியில் எட்டிப் பார்த்த போது, குழந்தை பியா பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். விளையாடி கொண்டிருந்த போது, கால்தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரிந்தது. சித்ரதுர்கா ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ