வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஆட்சிதான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அந்த எழுத்துக்களில் உள்ள பொன்னை கூட திருடும் கயவர் கூட்டம் உள்ளது. ஜாக்கிரதை.
மும்பை: 'பிரதமராக மோடியின் 11 ஆண்டு ஆட்சி காலம் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாதவ்பாக் லட்சுமிநாராயண் கோயிலின் 150வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:பரதமராக மோடி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த ஆட்சி காலம் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும். ஒரு சிட்டிகை குங்குமத்தின் மதிப்பு தெரியாதவர்களுக்கு ஆபரேஷன் சிந்துார் மூலம் அது குறித்து தெரிவிக்கப்பட்டது.பிரதமர் மோடி இந்தியராக இருப்பதில் மக்களை பெருமைப்பட வைத்துள்ளார், மேலும் வெளிநாடுகளில் இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளார்.இவரது ஆட்சிக் காலத்தில், வலுவான அரசியல் விருப்பத்தின் காரணமாகத்தான் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் காசி விஸ்வநாத் வழித்தடம் கட்டப்பட்டது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஆட்சிதான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அந்த எழுத்துக்களில் உள்ள பொன்னை கூட திருடும் கயவர் கூட்டம் உள்ளது. ஜாக்கிரதை.