உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிச.,16ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் கணிப்பு

டிச.,16ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கக்கடலில் டிசம்பர் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தற்போது, வங்கக்கடலில் டிசம்பர் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o4lapbbt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. வங்கக்கடலில் டிசம்பர் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும். தமிழகத்தில் இன்று (டிச.,13) மற்றும் டிசம்பர் 17ம் தேதி ஆகிய இரு நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 16, 17, 18ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ganapathy
டிச 13, 2024 12:57

வேளாச்சாரிவாசிகள் வருடத்தில் இனி மழைகாலம் முழுவதும் பாலத்தில் நிறுவதற்காகவே கார் வண்டி வாங்கினமாதிரி ஆயிருச்சு. இது நிசமாலுமே கார்பன் வாயுவை குறைக்க 4000 கோடி ஆட்டைய போட்டு திராவிடமாடல் அரசு செய்த சாதனை. உண்மைல நான்கு மாதங்கள் வீட்ல வண்டி இருந்தாலும் உபயோகப்படாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை