உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுவரை இல்லாத புதிய உச்சம்; அக்டோபரில் ரூ.23.5 லட்சம் கோடி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை!

இதுவரை இல்லாத புதிய உச்சம்; அக்டோபரில் ரூ.23.5 லட்சம் கோடி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவிற்கு யு.பி.ஐ., மூலம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fa3v73cv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரி செலுத்துதல், மருத்துமனைகள், கல்வி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு, ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம்.இந்நிலையில், யு.பி.ஐ., மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, 1,658 கோடி, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பரிவர்த்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதத்தை விட 10 சதவீதம் அதிகம். பரிவர்த்தனைகள் மதிப்பின் அடிப்படையில் 14 சதவீதம் அதிகம் என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வைகுண்டேஸ்வரன்
நவ 02, 2024 18:22

இது சந்தோஷிக்க வேண்டிய விஷயம் அல்ல. Cashless market is always a danger. Ask economists.


Sakthi,sivagangai
நவ 03, 2024 07:20

உன்னை மாதிரி மூளை மழுங்கடிக்கப்பட்ட திமுக கொத்தடிமைகளுக்கு இது சந்தோஷிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லைதான்...


Saai Sundharamurthy AVK
நவ 02, 2024 17:08

நல்ல விஷயம் தான். தொழில் நுட்ப வசதிகளை நம் மக்கள் கண கச்சிதமாக பிடித்துக் கொண்டு விட்டனர்.


ஆரூர் ரங்
நவ 02, 2024 16:44

மின்னணு பரிமாற்றத்தைக் கிண்டலடித்து எதிர்த்த P சிதம்பரம் என்ன நினைப்பாரோ?.


தத்வமசி
நவ 02, 2024 15:19

நான் வெளிநாட்டில் இருந்த போது இன்னும் சில வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன். அப்படி அந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் கையில் அந்தந்த நாட்டு கரன்சி எவ்வளவு தேவை என்பதை தீர்மானம் செய்து கையில் எடுத்துச் செல்வேன். இப்போது இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று வருகிறேன். கையில் இரண்டாயிரம் கூட எடுத்துச் செல்வதில்லை. எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனை. நல்லது என்பேன். ஒரு முறை கையில் பத்தாயிரம் கைமாற்றாக கொடுத்தார். நான் இரண்டாயிரம் கையில் கொடுங்கள், மீதியை ஆன்லைன் மூலம் கொடுத்து விடுங்கள் என்று கூறினேன். அது போல கையில் இரண்டாயிரம் எடுத்துச் சென்றேன். சொல்லி வைத்தார் போல பிக் பாக்கெட் அடித்து விட்டனர். எனது பர்ஸ் போய் விட்டது, இரண்டாயிரம் போச்சு, எட்டாயிரம் பிழைத்தது.


Skn
நவ 02, 2024 13:54

UPI a game changer


P. VENKATESH RAJA
நவ 02, 2024 13:06

ஆன்லைன் பரிவர்தனைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது...


சமீபத்திய செய்தி