உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மார்பக புற்றுநோயை ஒரே டோசில் குணப்படுத்தும் மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

மார்பக புற்றுநோயை ஒரே டோசில் குணப்படுத்தும் மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

புதுடில்லி: ஒரே டோஸில் மார்பக புற்றுநோய் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமை கொண்ட மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மருந்தால் எந்த பக்கவாதமும் ஏற்படாது என அவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து ஏசிஎஸ் மத்திய அறிவியல் என்ற மருத்துவ இதழில் நேற்று (ஜன.,22) ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் சக விஞ்ஞானிகள் குழுவினர் ஏற்கனவே புற்றுநோய் செல்களை கொல்லும் ERSO என்ற சிறிய மூலக்கூறினை கண்டறிந்தனர். ஆனால், இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. 2022ம் ஆண்டில் ஆய்வாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ERSO போன்ற சிறு மூலக்கூறுகளை வைத்து தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில், அதிக திறன் கொண்ட சிறு மூலக்கூறுவைக் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வின் இறுதியில் ERSO TFPY என்ற சிறந்த சிறு மூலக்கூறு உருவாக்கப்பட்டு அது மார்பகப் புற்றுநோய் கட்டிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்துள்ளனர். இது பல்கிப் பெருகும் மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும் கட்டுப்படுத்துவதோடு மிகப்பெரிய அளவிலான பக்கவிளைவுகளை எதையும் ஏற்படுத்தவில்லை. இது எலி, பூனை, நாய்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

AMLA ASOKAN
ஜன 24, 2025 09:46

வெளிநாடுகளில் விஞ்ஞானம் மேல் நோக்கி பறந்து கொண்டிருக்கிறது . இங்கு கால்நடைகளின் மீது ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது .


Dharmavaan
ஜன 24, 2025 07:57

இந்த இஞ்ஞானிகளை பாராட்ட வேண்டும்


SVS Maniyan
ஜன 24, 2025 07:29

நல்ல மருந்து விரைவில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவும்.


நிக்கோல்தாம்சன்
ஜன 24, 2025 05:39

மிக்க மகிழ்ச்சி , 50 வயதை கடந்த என்னைபோன்றவைகளுக்கு ஒரு இனம் புரியாத பதற்றம் இந்த புற்று நோயால் இருந்து வந்தது


Kasimani Baskaran
ஜன 24, 2025 05:19

அருமை. மிக சிக்கலானதாக சொல்லப்படும் மார்பக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து இருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.


புதிய வீடியோ