| ADDED : ஜன 10, 2024 12:05 AM
மஹாதேவபுரா : காருக்குள் அமர்ந்திருந்த இளம்பெண் முன், அநாகரிகமாக நடந்து கொண்ட வாலிபரை போலீஸ் தேடுகிறது.பெங்களூரு, மஹாதேவபுராவில் வசிப்பவர் 25 வயது இளம்பெண். இவர் கடந்த 5ம் தேதி இரவு, காரில் வெளியே சென்றார். பூங்கா முன் காரை நிறுத்தினார். டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். காரின் அருகே வந்த வாலிபர் ஒருவர், இளம்பெண் முன், அநாகரிகமாக நடந்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், காரின் ஜன்னல் கண்ணாடியை ஏற்றினார்.ஆனாலும், அந்த வாலிபர் காரைச் சுற்றிச் சுற்றி வந்தார். பயந்து போன இளம்பெண், ஸ்டியரிங் அடியில் சென்று, ஒளிந்து கொண்டார். பின்னர் வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதன்பின்னர் அங்கிருந்து காரில் வீட்டிற்கு, இளம்பெண் திரும்பினார்.தனக்கு நேர்ந்த துயரம் குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். பெங்களூரு போலீசை 'டேக்' செய்து உள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்படி, இளம்பெண்ணுக்கு, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.