உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அய்யப்ப தரிசனம் செய்த இளைஞருக்கு பேசும் சக்தி

அய்யப்ப தரிசனம் செய்த இளைஞருக்கு பேசும் சக்தி

மங்களூரு: வாய் பேச முடியாத நிலையில் இருந்த இளைஞருக்கு, சபரிமலைக்கு சென்று வந்ததும் பேச்சு வந்துள்ளது. இது, அய்யப்ப சுவாமியின் அருள் என, கூறுகின்றனர்.தட்சிணகன்னடா, புத்துாரின் சாமதெட்காவில் வசிப்பவர் பிரசன்னா, 18. இவர் மஹாலிங்கேஸ்வரா ஐ.டி.ஐ.,யில், இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிக்கிறார். இவர் வாய் பேச முடியாதவர். காதும் கேட்காது; சைகை மூலமாகவே உணர்த்துவார்.தன் கிராமத்தில் பலர், மாலை போட்டு சபரிமலைக்கு செல்வதை பார்த்து, தானும் அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என, விரும்பினார். கடந்தாண்டு மாலை அணிந்து, விரதம் அனுஷ்டித்து, சபரிமலை சென்றார். கரடு, முரடான பாதையில் நடந்து சென்று, அய்யப்பனை தரிசனம் செய்தார்.அய்யப்பனை தரிசனம் செய்து திரும்பிய பின், அவருக்கு பேச்சு வர துவங்கியுள்ளது. வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றாலும், நன்றாகவே புரிகிறது. அய்யப்ப கோஷம் எழுப்புகிறார். இதுவரை வாயில் இருந்து ஒரு வார்த்தையும் வந்தது இல்லை. இப்போது பேசுகிறார் என்றால், இதற்கு அய்யப்ப சுவாமியின் அருளே காரணம் என, குடும்பத்தினர் நம்புகின்றனர். இம்முறை மீண்டும் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rasheel
டிச 22, 2024 15:56

தூய மனதுடன் ஐயனை சரணாகதி அடைந்தால், அவன் நடத்தி வைப்பான்.


Sivak
டிச 20, 2024 22:09

ஐயப்ப ஸ்வாமியின் அருள் கடவுளின் கணக்கு யாருக்கும் புரியாது ...


Matt P
டிச 19, 2024 22:57

குமரகுருபரர் பெற்றோரோடு திருச்செந்தூர் வந்து அவர் ஐந்தாவது வயதில் தான் பேச்சு வந்ததாம். கந்தர் கலி வெண்பா பாடினர். வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள முடியாதவைகள் எவ்வளவோ இருக்கிறது. எதுவும் நடக்கலாம். இயற்கையின் அருள்.


Rajarajan
டிச 18, 2024 14:59

கோபாலபுரத்துக்கு தகவல் அனுப்பவும்.


Indian
டிச 18, 2024 10:22

செய்தி வருமா?


Vijayakumar s
டிச 18, 2024 09:27

வாழ்க வளமுடன் இதுதான் ஐயப்பன் திருவிளையாடல் நம் ஐயப்பனை நம்பினோர் அவர் என்றும் கைவிடுவதில்லை ஆம் சாமியே சரணம் ஐயப்பா


Vijayakumar s
டிச 18, 2024 09:24

வாழ்க வளமுடன் நன்றாக பேச எல்லாம் வல்ல சபரி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்


Parameshwaran Rajasekaran
டிச 17, 2024 21:26

Super


Mahalakshmi Kumar
டிச 17, 2024 13:19

பயபக்தியுடன் இருந்ததால் ஐயப்பன் அருளால் மறுபிறவி கிடைத்தது வாழ்த்துக்கள்


krishnamurthy
டிச 17, 2024 07:49

தெய்வ மஹிமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை