உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க இயலாது: இ.பி.எப்.ஓ.,

பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க இயலாது: இ.பி.எப்.ஓ.,

புதுடில்லி: ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, இ.பி.எப்.ஓ., என்னும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் என்பது ஓர் அடையாள சரிபார்ப்பு அட்டை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் அட்டையை நீக்கியுள்ளது. யு.ஐ.டி.ஏ.ஐ., என்னும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உத்தரவுக்குப் பின், இ.பி.எப்.ஓ., இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.கடந்த ஜனவரி 16ம் தேதி இது தொடர்பாக யு.ஐ.டி.ஏ.ஐ., வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பல பயனாளிகளால் பிறந்த தேதிக்கான ஆதாரமாகக் கருதப்படும் ஆதார், முதன்மையாக ஓர் அடையாள சரிபார்ப்பு கருவி மட்டுமே என்றும்; பிறப்புக்கான ஆதாரம் இல்லை என்றும் இ.பி.எப்.ஓ., தெரிவித்துள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு, மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. சில சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகளும், ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாகக் கருத முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை