பஸ் மார்ஷல்களுக்கு மீண்டும் பணி பா.ஜ., மீது ஆம் ஆத்மி புகார்
விக்ரம் நக:'பஸ் மார்ஷல்களை மீண்டும் பணியில் அமர்த்தும் விவகாரத்தில் பா.ஜ., பல்டி அடிக்கும்' என, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.செய்தியாளர் கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் திலீப் பாண்டே, குல்தீப் குமார், சஞ்சீவ் ஜா ஆகியோர் கூட்டாக கூறியதாவது:பஸ் மார்ஷல்களை மீண்டும் பணி அமர்த்தும் விவகாரம் தொடர்பாக சந்திக்க நேரம் ஒதுக்கும்படி, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.பஸ் மார்ஷல்களை மீண்டும் நியமிப்பதற்குத் தேவையான அனைத்தையும் ஆம் ஆத்மி செய்துள்ளது. இதற்காக சட்டசபையில் ஒரு முன்மொழிவை நிறைவேற்றினோம். இந்த விஷயத்தில் அதன் வாக்குறுதியை பா.ஜ., மீறுகிறது.பஸ் மார்ஷல்களை நியமிக்கும் பிரச்னையில் துணைநிலை கவர்னரை சந்திக்கும் ஆம் ஆத்மியின் முன்மொழிவுக்கு பா.ஜ., ஒப்புக்கொண்டது. ஆனால் இப்போது பல்டி அடித்து வருகிறது.சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு திட்டமும் அதிகாரப்பூர்வமானது. எங்களுக்கு கவர்னர் அவகாசம் அளித்திருக்க வேண்டும்; அவர் கொடுக்கவில்லை. எங்களுக்கு அவகாசம் அளித்து பஸ் மார்ஷல்களை துணைநிலை கவர்னர் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.தீபாவளிக்கு முன்னதாக பேருந்து மார்ஷல்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு துணைநிலை கவர்னரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதனால் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை அவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.