உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் மீது தாக்குதல்: ஆம்ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

கெஜ்ரிவால் மீது தாக்குதல்: ஆம்ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பாத யாத்திரை சென்றபோது கெஜ்ரிவால் பா. ஜ., வினரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி, விகாஸ்புரியில் கெஜ்ரிவால் பாத யாத்திரை சென்றபோது திடீரென புகுந்த கும்பல் ஒன்று அவரை தாக்கியதாக டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜ., முயற்சி செய்கிறது. பா.ஜ., வின் கேடுகெட்ட அரசியல் எவ்வளவு கீழ்நிலைக்கு சென்று விட்டது என்பதை டில்லி மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியா, 'அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது கவலை அளிக்கிறது. பா.ஜ., தனது குண்டர்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதேனும் நேர்ந்தால், பா. ஜ., தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும். நாங்கள் பயப்படப் போவதில்லை. ஆம் ஆத்மி கட்சி தனது பணியில் உறுதியாக இருக்கும்,'என்றார்.

போலீசார் மறுப்பு

ஆம் ஆத்மியினரின் குற்றச்சாட்டை டில்லி போலீசார் மறுத்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது எங்கும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

என்றும் இந்தியன்
அக் 26, 2024 18:09

இந்த ஒரு சின்ன விஷயம் கூட செய்யத்தெரியாத பா ஜாவிற்கு எப்படி ஒட்டு போடுவது.


Anand
அக் 26, 2024 17:57

அச்சச்சோ, நீ உண்மையே பேசியே வாழும் ஜென்மமாச்சே.....


Sivagiri
அக் 26, 2024 14:25

ட்ரம்பை இமிடேஷன் பண்ணி கூச்சல் போட்டா நம்மிருவங்கள ?


Duruvesan
அக் 26, 2024 13:03

ஐயோ கொல்றங்களே ட்ராமா, கட்டுமர பல்கலை கழக மாணவன்


Dharmavaan
அக் 26, 2024 12:29

பொது சொத்தை கொள்ளை அடித்தவனின் பரிதாபம் தேடும் முயற்சி


M Ramachandran
அக் 26, 2024 12:20

குஜிரிவாலின் வழக்காமானா குண்டடி டயனமைட் விளையாட்டு.


saiprakash
அக் 26, 2024 12:09

மட்டுமே படிக்கத்தகுதியானா நாளிதழ்


ஆரூர் ரங்
அக் 26, 2024 11:26

கட்டுமரம் கூட டப்பிங் வாய்ஸில் அய்யோ கொல்றாங்களேன்னு ட்ராமா ஆடினார். ஆனால் பாவம் அது எடுபடாமல் போனது.


Lion Drsekar
அக் 26, 2024 10:13

பதவி பறிபோனால் தன்மீது தாக்குதல் போன்ற உண்மை மற்றும் வதந்திகள் , பதவியில் இருந்தால் மாநாடு இவைகளை விட்டால் மக்களுக்கென்று எதுவுமே நமக்கேன் வம்பு, ஹிரண்யாய நமஹ


KRISHNAN R
அக் 26, 2024 10:00

அரசியல் வாதிகள் எப்போதும் கம்பி கட்டுவதில்...சமர்தர்களாக உள்ளனர். மக்கள் நிலை..பரிதாபமாக உள்ளது. democracy என்பது. டெமோன்ஸ் crazy ஆகிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை