தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
புதுடில்லி:இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரோலில் சென்று தலைமறைவான தண்டனைக் கைதி, கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் பக்பத் நகரைச் சேர்ந்தவர் தீபக் குமார் என்ற சஞ்சய்,36. டில்லி, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடூர வழக்கு களில் தொடர்புள்ளவர். புதுடில்லி ரோஹ்தக்கில் 2008ம் ஆண்டு நடந்த கொலையில், தீபக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2023ம் ஆண்டு பரோலில் சென்ற தீபக் தலைமறைவானார். தனிப்படை போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், கிழக்கு டில்லி ஆனந்த் விஹார் பஸ் ஸ்டாண்டில் திரிந்த தீபக் குமார் கைது செய்யப்பட்டு, கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.