உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூவர் பலியான விபத்து; எப்.ஐ.ஆர்., நகல் கொடுக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட எஸ்.ஐ., சஸ்பெண்ட்

மூவர் பலியான விபத்து; எப்.ஐ.ஆர்., நகல் கொடுக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட எஸ்.ஐ., சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: விபத்து வழக்கில் எப்.ஐ.ஆர்., நகலுக்கு லட்சம் கேட்ட வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.புதுச்சேரி, சேதராப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கடப்பேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். குயிலாப்பாளையம் குணசேகரன், செந்தில். மூவரும் கடந்த மாதம் 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் பத்துக்கண்ணு பகுதியில் இருந்து சரண்ராஜின் பல்சர் பைக்கில் சேதராப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள ஜே.பி.ஏ., இரும்பு கம்பனி வளைவு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருத்த டாரஸ் லாரி மீது பைக் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கடப்பேரிக்குப்பம் சரண்ராஜின் சகோதாரர் முத்து, சில வாரங்களுக்கு முன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் எப்.ஐ.ஆர்., நகல் கேட்டார். அதற்கு சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் முத்து புகார் தெரிவித்தார்.அதன்பேரில், டி.ஜி.பி., ஷாலினி சிங், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரை கடந்த சில தினங்களுக்கு முன், ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். தொடர் விசாரணைக்கு பிறகு நேற்று சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sampath, k
மார் 24, 2025 07:44

Suspension is not a punishment. Removal from government job is only a solution. Reduction to lower post, cut short the annual increments and transfer to other posts should be avoided these types of cases against any government officials


Bhaskaran
மார் 21, 2025 19:26

இம்மாதிரி அசிங்க பிறவிகளை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்


Karthik
மார் 20, 2025 19:38

இப்படி கை நீட்டி லஞ்சம் கேட்பதை விட., நால்ரோட்டில் நிற்பதே மேல்..


Yes your honor
மார் 20, 2025 14:52

தமிழக போலீசாரின் முன்பு இவரெல்லாம் எம்மாத்திரம்?


Ramesh Sargam
மார் 20, 2025 12:36

இப்படி லஞ்சம் வாங்கி ....


Chandra
மார் 20, 2025 11:25

இனி எந்த ஒரு அரசு வேலைக்கும் தகுதி இழப்பு செய்யவேண்டும்.


Ramesh Sargam
மார் 20, 2025 12:35

ஆனால் இவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து எம் எல் ஆக்களாக மாறிவிடுவார்களே...


Padmasridharan
மார் 20, 2025 10:56

Suspension/Transfer வேலை செய்யாது சாமியோவ். Dismiss பண்ணுங்கோ. சிறைக்கு பின்னால் அடைங்க.


baala
மார் 20, 2025 10:46

லஞ்ச பணத்தை வைத்து சாப்பாடு. அது சாப்பாடு அல்ல .... லஞ்ச பணத்தில் சாப்பிடும் அனைவருமே வெட்கப்படவேண்டும்


Srinivasan Krishnamoorthi
மார் 20, 2025 10:41

SI மாற்ற படுவார் அவ்வளவு தான்


மகா
மார் 20, 2025 10:27

எந்த கணவன் அதிகாரி லஞ்சம் மற்றும் இதர குற்றங்களில் ஈடுபடுகிறாரோ அவர் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள் , அப்படி என்றால் ஆயுத படையில் எத்தனை குற்றவாளிகள் ??


புதிய வீடியோ