மேலும் செய்திகள்
ரேணுகாசாமி கொலை வழக்கு மூவருக்கு நிபந்தனை ஜாமின்
24-Sep-2024
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், ஏற்கனவே மூன்று பேருக்கு ஜாமின் வழங்கிய நிலையில், நேற்று மேலும் இருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா ஆகியோர் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை, பெங்களூருக்கு கடத்தி வந்து, கடந்த ஜூன் 9ம் தேதி இரவு, சுமனஹள்ளி ஷெட் ஒன்றி, அடித்து கொலை செய்தனர். இவ்வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.அனைவரும் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில், 'ஏ 15' கார்த்திக், 'ஏ 16' கேசவமூர்த்தி, 'ஏ 17' நிகில் நாயக் ஆகிய மூன்று பேருக்கு, செப்டம்பர் 23ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.இதற்கிடையில், 'ஏ 1' பவித்ரா கவுடா, 'ஏ 2' நடிகர் தர்ஷன் உட்பட சிலரது ஜாமின் மனுக்கள் மீது, பெங்களூரு 57வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த வாரம் முடிந்த நிலையில், தீர்ப்பு நேற்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இதன்படி, பவித்ரா, தர்ஷன், அவரது மேலாளர் ஏ 11 நாகராஜ், ஏ 12 லட்சுமண் ஆகியோருடைய ஜாமின் மனுக்களை நீதிபதி ஜெய்சங்கர் நேற்று தள்ளுபடி செய்தார். மேலும், ஏ 8 ரவிசங்கர், ஏ 13 தீபக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.ஜாமின் மறுக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் பவித்ராவும், பல்லாரி மாவட்ட சிறையில் தர்ஷனும் கவலையில் உள்ளனர்.
24-Sep-2024